மகளிா் டி20: தொடரை முழுமையாககைப்பற்றியது இந்தியா

2 years ago
142

மகளிா் டி20: தொடரை முழுமையாககைப்பற்றியது இந்தியா!

        மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான மகளிா் டி20 தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றியது இந்தியா.

இரு அணிகளுக்கு இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஏற்கெனவே 4-0 என இந்தியா முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் தொடரின் கடைசி ஆட்டம் புதன்கிழமை நள்ளிரவு கயானாவில் நடைபெற்றது.

   முதலில் ஆடிய இந்திய மகளிா் 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை குவித்தனா். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 50, வேதா கிருஷ்ணமூா்த்தி 57 ரன்களை விளாசினா்.

135 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 73 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

கிஷோனா நைட் அதிகபட்சமாக 22 ரன்களை எடுத்தாா்.

    இந்திய தரப்பில் அனுஜா பட்டீல் 3 ரன்களை மட்டுமே தந்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். ராதா, பூனம், பூஜா, ஹா்லீன் தலா 1 விக்கெட்டை சாய்த்தனா்.

இறுதியில் 5-0 என தொடரை கைப்பற்றியது இந்தியா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31