இன்றைய ராசி பலன்கள் – 06-11-2019 புதன்கிழமை

2 years ago
130

இன்றைய ராசி பலன்கள் – 06-11-2019 புதன்கிழமை

மேஷம்
 எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்கள் கைகூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அஸ்வினி : காலதாமதம் நேரிடும்.
பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : வெற்றி உண்டாகும். 
—————————————
ரிஷபம்
 பூர்வீக சொத்துக்கள் தொடர்பான சுபச்செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப நபர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை அளிக்கும். பொன், பொருள் வாங்கும் வாய்ப்புகள் சாதகமாகும். தொழில் சார்ந்த பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 
கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.
ரோகிணி : சுபிட்சமான நாள். 
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
—————————————
மிதுனம்
 பணி சம்பந்தமான வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் சிறு மாறுதல்களை செய்வதன் மூலம் நல்ல இலாபத்தை அடைய முடியும். பெற்றோரின் ஆதரவுகள் மனதிற்கு புது நம்பிக்கையை தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : அனுபவம் கிடைக்கும்.
திருவாதிரை : இலாபம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : நம்பிக்கை உண்டாகும். 
—————————————
கடகம்
 உயர் அதிகாரிகளிடம் பேசும்போது சற்று நிதானம் வேண்டும். புதிய முயற்சிகள் மற்றும் உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : காலதாமதம் உண்டாகும்.
ஆயில்யம் : கோபத்தை தவிர்க்கவும்.
—————————————
சிம்மம்
 உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்களின் உதவியால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு இன்பத்தை அளிக்கும். விரும்பிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீர்வழி தொடர்பான பயணங்களால் பொருளாதார நிலை மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : ஆரோக்கியம் மேம்படும்.
பூரம் : இன்பமான நாள்.
உத்திரம் : பொருளாதாரம் மேம்படும்.
—————————————
கன்னி
 திட்டமிட்ட பணிகள் மற்றும் முயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். மனதில் இருந்த பலவிதமான குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த உதவிகளால் கடன் பிரச்சனைகள் குறையும். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து அதை பூர்த்தி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : பிரச்சனைகள் நீங்கும்.
அஸ்தம் : தெளிவு பிறக்கும்.
சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
—————————————
துலாம்
 குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். ஆன்மீக பயணங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருளாதார மேம்பாட்டிற்கான செயல்பாடுகளில் அலைச்சலும், காலதாமதமும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு 
சித்திரை : அனுசரித்து செல்லவும்.  
சுவாதி : சிந்தித்து செயல்படவும். 
விசாகம் : பொருளாதாரம் மேம்படும்.
—————————————
விருச்சிகம்
 சுபச்செய்திகளால் மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசாகம் : சுபச்செய்திகள் கிடைக்கும். 
அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
கேட்டை : அனுகூலமான நாள். 
—————————————
தனுசு
 வெளியூர் பயணங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்தநிலை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். 
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மூலம் : செலவுகள் ஏற்படும்.
பூராடம் : மந்தநிலை உண்டாகும்.
உத்திராடம் : தொடர்புகள் அதிகரிக்கும். 
—————————————
மகரம்
 மனதில் திட்டமிட்ட காரியங்களை துணிவோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். புதுவிதமான ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். பணிபுரியும் இடங்களில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6 
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : வெற்றி காண்பீர்கள்.
திருவோணம் : உயர்வு உண்டாகும். 
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும். 
—————————————
கும்பம்
உடன்பிறப்புகளின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நன்மை அளிக்கும். பயனற்ற எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளால் மன உளைச்சல் ஏற்படும். சுரங்கம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். 
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்.
சதயம் : மன உளைச்சல் ஏற்படும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும். 
—————————————
மீனம்
 எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் மாற்றமான சூழலை உருவாக்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்துவந்த எதிர்ப்புகள் சற்று குறையும். நிலுவையில் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : பணவரவு உண்டாகும். 
உத்திரட்டாதி : எதிர்ப்புகள் குறையும்.
ரேவதி : மகிழ்ச்சியான நாள்.
—————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31