04-11-2019 திங்கட்கிழமை – இன்றைய ராசி பலன்கள்

2 years ago
198
04-11-2019 திங்கட்கிழமை – இன்றைய ராசி பலன்கள்

மேஷம்
 வியாபாரத்தில் கையாளும் புதிய யுக்திகளால் இலாபம் அதிகரிக்கும். பொதுப்பணியில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களால் மரியாதை உயரும். புத்திரர்களின் செயல்பாடுகள் பெருமையை தரும். பணியில் முயற்சிக்கேற்ற ஆங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் உங்களின் செல்வாக்கு உயரும். எடுத்த வேலையை விரைவாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அஸ்வினி : இலாபம் அதிகரிக்கும்.
பரணி : கீர்த்தி உண்டாகும். 
கிருத்திகை : செல்வாக்கு உயரும். 
—————————————
ரிஷபம்
 தந்தைவழி உறவினர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்க பணியில் எதிர்பார்த்த ஆதரவான சூழல் அமையும். வேலையாட்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். பயணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : கனிவு வேண்டும்.
ரோகிணி : ஆதரவான நாள்.
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும். 
—————————————
மிதுனம்
 செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்க காலதாமதமாகும். புதுவிதமான பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமாகும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்களில் காலதாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7 
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : பதற்றமின்றி செயல்படவும். 
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : ஆர்வம் ஏற்படும்.
—————————————
கடகம்
 புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையேயான உறவு மேம்படும். புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். உடல் தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.
பூசம் : உறவுகள் மேம்படும். 
ஆயில்யம் : மாற்றமான நாள். 
—————————————
சிம்மம்
 உத்தியோகஸ்தரர்கள் நீண்ட நாட்களாக இருந்த பணிகளை முடிப்பார்கள். சமூக நிகழ்வுகளால் மனதில் மாற்றம் உண்டாகும். சுயதொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். பணியில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மகம் : மாற்றம் உண்டாகும்.
பூரம் : எண்ணங்கள் மேலோங்கும்.
உத்திரம் : சுறுசுறுப்பு உண்டாகும்.
—————————————
கன்னி
 குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் அமையும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் உள்ள கவலைகள் குறையும். கடன்களை அடைப்பதற்கான தனவரவுகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆதரவான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் 
உத்திரம் : கலகலப்பான நாள்.
அஸ்தம் : கவலைகள் குறையும்.
சித்திரை : ஆதரவான நாள். 
—————————————
துலாம்
 உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபச்செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். கூட்டாளிகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். சர்வதேச வணிகத்தில் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : இன்பமான நாள்.
சுவாதி : சுபச்செய்திகள் வரும்.
விசாகம் : மேன்மை உண்டாகும்.
—————————————
விருச்சிகம்
 குடும்ப நபர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். பூமி விருத்திக்கான கடன் உதவிகள் கிடைக்கும். தொழில் திறமையால் மேன்மையும், பாராட்டும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள். தைரியத்துடன் எண்ணிய செயலை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
விசாகம் : உதவிகள் கிடைக்கும். 
அனுஷம் : பாராட்டப்படுவீர்கள்.
கேட்டை : எதிர்ப்புகள் குறையும்.
—————————————
தனுசு
 பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் உயரும். நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நேரிடலாம். உத்தியோகஸ்தரர்கள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். எண்ணிய செயல்கள் சில தடைகளுக்கு பின் முடிவடையும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உணர்வு ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : பொறுப்புகள் உயரும்.
பூராடம் : தடைகள் நீங்கும்.
உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
—————————————
மகரம்
 பழைய நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சாதகமான சூழல் அமையும். மனதில் புதுவிதமான புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எண்ணங்கள் தெளிவாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.
திருவோணம் : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். 
அவிட்டம் : திருப்தியான நாள்.
—————————————
கும்பம்
 கண் சம்பந்தமான உபாதைகள் குறையும். நண்பர்களுடன் கேளிக்கையில் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சுப விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் அமையும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. திருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அவிட்டம் : உபாதைகள் குறையும். 
சதயம் : கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.
பூரட்டாதி : மாற்றமான நாள்.
—————————————
மீனம்
 உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆகாய மார்க்க பயணங்களில் அனுகூலம் ஏற்படும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். ஆன்மீக பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புதுவிதமான இடத்திற்கு சென்று வருவீர்கள். எதிர்பார்த்த தனவரவு மகிழ்ச்சியை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரட்டாதி : அனுகூலமான நாள். 
ரேவதி : வாய்ப்புகள் உண்டாகும்.
——————————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31