01-11-2019 வெள்ளிக்கிழமை – இன்றைய ராசி பலன்கள்

2 years ago
292

01-11-2019 வெள்ளிக்கிழமை – இன்றைய ராசி பலன்கள்

மேஷம்
 நிர்வாகம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் கவனம் வேண்டும். இன்பச் சுற்றுலாக்கள் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். எண்ணிய கடன் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அஸ்வினி : முடிவுகளில் கவனம் வேண்டும்.
பரணி : பொருளாதாரம் மேம்படும்.
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
—————————————
ரிஷபம்
 உடைமைகளை கவனத்துடன் வைத்துக் கொள்ளவும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் பணிகளில் விமர்சனங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அமைதிப்போக்கினை கடைபிடிக்கவும். பணிபுரியும் இடங்களில் தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும். 
ரோகிணி : அமைதி வேண்டும்.
மிருகசீரிஷம் : வாதங்களை தவிர்க்கவும்.
—————————————
மிதுனம்
 நண்பர்களின் உதவியால் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். சக ஊழியர்களால் சாதகமான சூழல் உண்டாகும். பொன் மற்றும் பொருள்களின் சேர்க்கை உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளை சுமூகமான முறையில் பேசி முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
புனர்பூசம் : தீர்வு கிடைக்கும்.
—————————————
கடகம்
 சக ஊழியர்களிடம் சற்று கவனமாக இருக்கவும். சுப நிகழ்ச்சிகள் காரணமாக அலைச்சல்கள் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். பணிகளில் உள்ள காரியத்தடைகளை களைவீர்கள். எதையும் சமாளிக்கும் திறமை மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : கவனம் தேவை.
பூசம் : அலைச்சல்கள் ஏற்படும்.
ஆயில்யம் : காரியத்தடைகள் நீங்கும்.
—————————————
சிம்மம்
 தொழில் சம்பந்தமான முடிவுகள் சாதகமான பலன்களை அளிக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவுகளிடம் எதிர்பார்த்த உதவுகள் கிடைக்கும். நீர்வழி தொழிலில் இலாபம் உண்டாகும். தொழில் தொடர்பான நுட்ப அறிவு மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரம் : சாதகமான நாள். 
உத்திரம் : நுட்ப அறிவு மேம்படும்.
—————————————
கன்னி
 குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் ஆதாயம் உண்டாகும். கால்நடை வளர்ப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளால் மேன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களால் இலாபம் அடைவீர்கள். 
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளீர் நீலம்
உத்திரம் : ஆதாயம் உண்டாகும். 
அஸ்தம் : இலாபம் அதிகரிக்கும். 
சித்திரை : முன்னேற்றம் உண்டாகும். 
—————————————
துலாம்
 வேலை செய்யும் இடங்களில் எதிர்பாராத உயர் பதவிகள் கிடைப்பதற்கான சூழல் அமையும். பணிகளில் எதையும் செய்வதற்கான சுதந்திரம் அதிகரிக்கும். எண்ணிய காரியங்களை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். தொழிலில் புதிய நபர்களை வேலைக்கு அமர்த்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : உயர்வான நாள்.
சுவாதி : சுதந்திரம் அதிகரிக்கும்.
விசாகம் : காரியசித்தி உண்டாகும்.
—————————————
விருச்சகம்
 புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தைகளில் சுபமான செய்திகள் கிடைக்கும். பணிகளில் மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். தொழிலில் செய்யும் சிறு மாற்றங்கள் புதுவிதமான அனுபவத்தை அளிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8 
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : திட்டம் அமைப்பீர்கள்.
அனுஷம் : நற்செய்திகள் கிடைக்கும்.
கேட்டை : இடமாற்றம் உண்டாகும்.
—————————————
தனுசு
 மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். அறச்செயல்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். 
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
பூராடம் : அனுசரித்து செல்லவும். 
உத்திராடம் : உயர்வு உண்டாகும்.
—————————————
மகரம்
 விவாதங்களில் சாதகமான சூழலால் வெற்றி கிடைக்கும். சமூக சேவை புரிபவர்களுக்கு புகழ் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கலைஞர்களுக்கு திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல்களில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : வெற்றி கிடைக்கும். 
திருவோணம் : புகழ் உண்டாகும்.
அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.
—————————————
கும்பம்
 உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். தந்தையின் பணிகளில் பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களுக்கிடையே வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : நிதானம் வேண்டும்.
சதயம் : ஆதரவான நாள்.
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
—————————————
மீனம்
 உயர் அதிகாரிகளின் ஆதரவுகளால் தொழிலில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார மேன்மைக்கான செயல்திட்டங்களில் எண்ணிய பலன்கள் கிடைக்கும். வாக்குவன்மையால் முன்னேற்றம் உண்டாகும். எண்ணிய காரியங்கள் நடைபெறும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : சுபமான நாள்.
உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.
ரேவதி : எண்ணங்கள் ஈடேறும்.
————————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31