31-10-2019 வியாழக்கிழமை – இன்றைய ராசி பலன்கள்

1 year ago
91

31-10-2019 வியாழக்கிழமை – இன்றைய  ராசி பலன்கள்

மேஷம்
உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. தொலைதூர பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிறுசிறு அவச்சொற்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அஸ்வினி : பொறுப்புகளில் கவனம் வேண்டும்.
பரணி : அலைச்சல் உண்டாகும்.
கிருத்திகை : அவச்சொற்கள் ஏற்படும்.
—————————————

ரிஷபம்
உரையாடல் மற்றும் செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : புத்திக்கூர்மை வெளிப்படும்.
ரோகிணி : ஆதாயம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
—————————————

மிதுனம்
உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். மனதில் நினைத்த காரியங்களில் காலதாமதம் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : வேறுபாடுகள் தோன்றும்.
திருவாதிரை : காலதாமதம் உண்டாகும்.
புனர்பூசம் : அனுகூலமான நாள்.
—————————————

கடகம்
பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிப்பதை தவிர்க்கவும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எண்ணிய காரியத்தை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : முயற்சிகள் ஈடேறும்.
பூசம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
ஆயில்யம் : தன்னம்பிக்கை மேம்படும்.
—————————————

சிம்மம்
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணவரவின் மூலம் மேன்மையான சூழல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : ஆதரவான நாள்.
பூரம் : காரியங்கள் நிறைவேறும்.
உத்திரம் : தெளிவு பிறக்கும்.
—————————————

கன்னி
உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். திட்டமிட்ட செயல்பாடுகளில் காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : முன்னேற்றமான நாள்.
அஸ்தம் : எதிர்ப்புகள் குறையும்.
சித்திரை : வெற்றி கிடைக்கும்.
—————————————

துலாம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
சித்திரை : கலகலப்பான நாள்.
சுவாதி : முன்னேற்றம் ஏற்படும்.
விசாகம் : செல்வாக்கு மேம்படும்.
—————————————

விருச்சிம்
குடும்ப நபர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிப்பது பற்றிய சிந்தனைகள் மேம்படும். பயணங்களால் அலைச்சலும், புதுவிதமான அனுபவமும் உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : சுபிட்சம் உண்டாகும்.
அனுஷம் : சேமிப்பு அதிகரிக்கும்.
கேட்டை : அனுபவம் உண்டாகும்
—————————————

தனுசு
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதியவர்களின் நட்பால் உற்சாகம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் சாதகமான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : மனக்கசப்புகள் நீங்கும்.
உத்திராடம் : மாற்றமான நாள்.
—————————————

மகரம்
உறவினர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் செல்வாக்கு மேம்படும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் சாதகமாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
திருவோணம் : செல்வாக்கு மேம்படும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கைகூடும்.
—————————————

கும்பம்
உத்தியோகஸ்தரர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதுவிதமான  பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நிலுவையில் இருந்துவந்த பணிகள் நிறைவடையும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். செயல்பாடுகளில் இருந்துவந்த பதற்றம் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : இடமாற்றம் கிடைக்கும்.
சதயம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
பூரட்டாதி : பதற்றம் குறையும்.
—————————————

மீனம்
புதிய வீடு மற்றும் இடம் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். தந்தைவழி சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். அரசு அதிகாரிகளின் ஆதரவால்  சில செயல்களை செய்து முடிப்பீர்கள். மனைவிவழி உறவுகளால் நன்மை உண்டாகும். பிரபலமானவர்களின் தொடர்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
ரேவதி : நன்மை உண்டாகும்.
———————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031