ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு -சர்ச்சை

 ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு -சர்ச்சை

காசி விஸ்வநாதர் கோவில்- ஞானவாபி மசூதி வளாகத்தை வீடியோ படம் எடுத்த ஆய்வுக் குழுவின் கண்டுபிடிப்புகள் உண்மையில் எவ்வளவு ரகசியமானவை? அவர்கள் ஏன் ரகசியமாக இருக்க வேண்டும்? அவர்கள் என்ன கண்டுபிடிப்பார்கள் என்று அனைவருக்கும் ஏற்கெனவே தெரியாதா?
காசி விஸ்வநாதர் கோவில்- ஞானவாபி மசூதி வளாகத்தை வீடியோ படம் எடுத்த ஆய்வுக் குழுவின் கண்டுபிடிப்புகள் உண்மையில் எவ்வளவு ரகசியமானவை?
ரகசியம் எல்லாம் ஒன்றும் இல்லை! உள்ளே என்ன இருக்கும் எ‌ன்பதை வெளிப் புறத் தூண்களைப் பார்த்தாலே தெரிகிறது. அவர்கள் என்ன கண்டுபிடிப்பார்கள் என்று அனைவருக்கும் ஏற்கனவே தெரியும்.
யாரால் இந்த விஷயம் வெளியே வந்தது? அதை பார்ப்போம்!
உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி வளாகத்தின் மேற்கு சுவரின்வெளியே உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வாரணாசி கோர்ட்டு, ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து கடந்த 14.5.2022 சனிக்கிழமை முதல் மூன்று நாட்கள் மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வுப் பணிகள் நடைபெற்றது. அப்போது, இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் இந்து மதக் கடவுளான சிவலிங்கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால், ஞானவாபி மசூதிக்குள் ஆட்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. மசூதிக்குள் வழிபாடு நடத்த ஒரு முறைக்கு 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும், அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
2022 மே 16 அன்று, உள்ளூர் நீதிமன்றம் வாரணாசி, கியான்வாபி மசூதி வளாகத்தில், நீதிமன்றத்தால் ‘பரிந்துரைக்கப்பட்ட’ வீடியோகிராஃபி கணக்கெடுப் பின்போது ‘சிவலிங்கம்’ கண்டுபிடிக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்ட மூன்று நாள் கணக்கெடுப்பு, நே‌ற்று நிறை வடைந்தது. ஆகையால் இந்த இடத்திற்கு சீல் வைக்குமாறு மாவட்ட நிர்வாகத் திடம் வாரணாசி ஹை கோர்ட் உ‌த்தர‌வி‌ட்டது.
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தின் வீடியோ ஆய்வுக்கு இடைக்காலத் தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மே 13 அன்று உள்ளூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. எவ்வாறாயினும், இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா, மே 13 அன்று, வீடியோ எடுப்பதை நிறுத்தக் கோரிய மனுவில் உச்ச நீதிமன்றம் ஆவணங்களை ஆய்வு செய்யும் என்று கூறியது. பின்னர் இந்த விஷயத்தை நீதிபதி டி.வி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் முன் பட்டியலிட உத்தரவிட்டது.
கடைசி நாள் கணக்கெடுப்பின்போது, ​​குழுவினர் வசுகானா என்கிற அந்தத் தண்ணீரால் நிரம்பிய செயற்கை குளத்தை காலி செய்தனர். தண்ணீர் அகற் றப்பட்டவுடன், அந்த இடத்தில் சிவலிங்கம் கிடைத்தது. அதன் விட்டம் 12.8 அடி என்றும் நீளம் நான்கு அடி என்றும் கூறப்படுகிறது. இந்த சிவலிங்கம் நந்தியின் முகப்பில் இருந்து வடக்கே 84.3 அடி தொலைவில் அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. அவரைப் பார்த்ததும், இந்து தரப்பு வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின், சிவில் நீதிபதி வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் சர்வே உத்தரவை எதிர்த்து, மசூதி கமிட்டி தாக்கல் செய்த மனு மீது உத்தரப்பிரதேச அரசு மற்றும் இந்து மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மே 19அன்று நீதிமன்றம் இந்த விஷயத்தை மீண்டும் விசாரிக்கும்.
சிவலிங்கப் பகுதி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும். ஆனால் அது முஸ்லிம் கள் மசூதிக்குள் தொழுகைக்கு வருவதைத் தடுக்காது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன் நடுவே ஹைதராபாத் தொகுதி எம்.பி.யும், மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லீமன் கட்சித் தலைவருமான அசாதுதீன் உவைசி சொன்னது தானே ஹைலைட்…

ஞானவாபிக்குள் யாரேனும் சென்றாலும் இன்னொரு பாப்ரி மஸ்ஜித் கதை அரங் கேறும் என்று ஒவ்வொரு ஊடகத்தையும் கூப்பிட்டு கூறிக்கொண்டிருந்தார்.
வசுகானா என்றால் என்ன?
இஸ்லாமியர் தொழுகைக்கு முன் அவர்களின் கை முக்கியமாக கால்களைக் கழுவும் இடம்!

மூலவன்

1 Comment

  • சிவ லிங்கத்தோட நீளம் அகலம் வரை மக்களுக்கு தெரியப் படுத்தி இருக்கிறீர்களே.

    எது உண்மையான செய்தி எது பொய்யான செய்தி என ஆராயாமல் அறியாமல் இப்படித்தான் எழுதவேண்டுமா?!

    நமக்கென்று சமூக அக்கறை சமூக கடமை வேண்டாமா?

    இதை மின்னகைத்தடியில் எதிர்பார்க்கவில்லை சகோ.. மன்னிக்கவும்

Leave a Reply

Your email address will not be published.