“அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தையும் இழப்பீட்டையும் தராமல் தொடர்ந்து வேதனைப்பட வைப்பதன் மூலம், தமிழக அரசு சாதிப்பது என்ன?” என்கிறார் அரசு மருத் துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை. அவரிடம் பேசினோம்.

உங்கள் கோரிக்கை என்ன?
“கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்கள் 9 பேர். அதில் மிகவும் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து உயிரிழந்த டாக்டர் விவேகானந்தன் குடும்பத்தினர். டாக்டர் விவேகானந்தனின் மனைவி 31 வயதுடைய பொறியியல் பட்டதாரி திவ்யா. 8 வயது பெண் குழந்தை மற்றும் மூன்றரை வயது ஆண் குழந்தையுடன் வரு மானம் இன்றி மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இவர்களுக்கு அரசு அறிவித்த வாறு, படிப்புக்கேற்ற அரசுப்பணியும் (AE post), 25 லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றோம்.
குறிப்பாக அரசாணைப்படி ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மதுரை யில் நடத்திய தர்ணா போராட்டத்துக்குப் பின்பு இரண்டு முறை அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையின் போதும், இந்த விஷயத்தைத் தெரிவித்து டாக்டர் விவேகானந்தன் குடும்பத்துக்கு உதவுமபடி தெரிவித்தோம். உடனே அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

அதன்பின்பு டாக்டர் விவேகானந்தன் குடும்பத்தினருடன் நேரடியாக அமைச்சரின் இல்லத் துக்கே காலையில் சென்று வேண்டுகோள் வைத்தோம். அப்போது DMSஐ கைபேசியில் தொடர்புகொண்டு, 25 லட்சம் செக் போட்டு டாக்டர் விவேகானந்தன் குடும்பத்தினருக்குத் தருவதோடு, படிப்புக்கு ஏற்ற அரசு வேலை கிடைப்பதையும் துரிதப்படுத்துங்கள் என உத்தரவிட்டார்கள்.
இருப்பினும் உயிரிழந்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் மிகுந்த சிரமத்துடன் அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அமைச்சர் அனுதாபத்தோடு உதவ நினைத் தாலும் உயர் அதிகாரிகள் மட்டத்தில் விதவைப் பெண்ணுக்கு உதவ மறுக்கிறார்கள்.
அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை தர மறுப்பதன் மூலம் அரசின் செலவைக் குறைக்க முடிகிறது. ஆம். உயிர்காக்கும் மருத்துவர்களின் வயிற்றில் அடிப்பதால், வருடத்துக்கு 300 கோடி ரூபாய் மிச்சப்படுத்த முடிகிறது.
ஒருபுறம் சுகாதாரத் துறையில் முன்னணி மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. இன்னொரு புறம் இங்கு அரசு மருத்துவர்களுக்கு தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியம் வழங்கி வருவதையும் ஒரு சாதனையாகச் சொல்வார்கள் எனத் தெரிகிறது.
பொதுவாக நாட்டில் தனியார் நிறுவனங்கள் உரிய ஊதியம் தர மறுத்தாலே, அரசிடமதான் முறையிடுவார்கள். ஆனால் இங்கு அரசே பிடிவாதமாக உரிய ஊதியத்தை தர மறுப்பது என்பதை மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறார் கள்.

ஊதியப்பட்டை நான்கைத் தருவதற்குரிய அரசாணை இருந்தும், இங்கு இத்தனை ஆண்டு களாக, அப்பட்டமாக அரசு மருத்துவர்களை ஏமாற்ற முடிகிறது. மருத்துவர்களுக்குத் தொடர்ந்து இதபோன்று அநீதி இழைக்கப்படுவதை முன்மாதிரியாக, பெருமையாகச் சொல்வார்கள் எனத் தெரிகிறது.
ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றககோரி போராடிய அரசு மருத்துவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். மேலும் நாட்டிலேயே, போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற மருத்துவப் போராளி தன் உயிரையே தியாகம் செய்த பிறகும், இன்னமும் கோரிக்கையை நிறைவேற்றாமல், நம்மை வேதனைப்பட வைப்பதை சாதனையாக நினைக்கிறார்கள் போல. அதாவது நாட்டில் மற்ற மாநிலங்களில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதை மட்டுமே முக்கிய நோக்மாகக் கொண்டு செயல்படுகிறார்கள். ஆனால் இங்கோ கொரோனா வை;f கட்டுப்படுத்த, உயிரை பணயம் வைத்து உதவி வரும் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மறுப்பதில்தான் முக்கியத்துவம் தருகிறார்கள்.
அதிக வேலைப்பளு, உரிய ஊதியம் தரப்படாதது உள்ளிட்ட நெருக்கடியால், மன உளைச்ச லால் அரசு மருத்துவர்கள் உயிரிழப்பது குறித்து நாம் கவலைப்படுகிறோம். ஆனால் அவர்களோ தமிழகத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதன் மூலம், அரசு மருத்துவர்கள் இறப்பை ஈடுகட்டும் வகை யில், தற்போது இங்கு அதிக எண்ணிக்கையில் மருத்துவர்களை உருவாக்கு வதாக நினைக்கிறார்கள் போல.
தமிழகத்தில் சுகாதாரத் துறை மீதும், மருத்துவர்கள் நலனிலும் உண்மையி லேயே இவர்களுக்கு அக்கறை இருந்தால் எப்போதோ நம் கோரிக்கையை நிறைவேற்றியிருப்பார் கள். அதனால்தான் நீதிமன்றமே எத்தனையோ முறை அரசுக்கு வலியுறுத்தியும், நம் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற மறுத்து வருகிறார்கள்.
அனைத்து நாடுகளிலும் கொரோனாவுக்குப் பிறகு, மருத்துவர்களுக்குச் சிறப்பு மரியாதை யும் அங்கீகாரமும் அளித்து வருகிறார்கள். ஆனால் உலகிலேயே தமிழகத்தில்தான் கொரோனா சமயத்திலகூட அரசு மருத்துவர்களை அடிமைகளாக நடத்துவதை உலக சாதனையாகப் பிரகடனம் செய்ய நினைக்கிறார்கள் போல.
இருப்பினும் பொறுமைக்கும் எல்லை உண்டு. ஆம். நமக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை தர அரசை வலியுறுத்தி, மீண்டும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வாசலில் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை முன்னெடுத்து செல்ல, தயாராகி வருகிறோம் என்பதை வேதனையுடன் அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
கிராமங்களில் சேவையாற்ற மருத்துவர்கள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள தமிழக முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் வேதனையுடன் அளிக்கும் பதில்:
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், “மருத்துவம் என்பது வேலை அல்ல: அது ஒரு சேவை. ஜாதி- மத பேதம் இல்லாமல், ஏழை- பணக்காரர் என்ற வேற்றுமை இன்றி, தனக்கு முன்னால் இருப்பது ஓர் உயிர் என்ற உன்னதமான எண்ணத்தோடு, நோயாளியை காக்கும் கடமையை நீங்கள் செய்யப் போகிறீர்கள். மருத்துவர்களாகிய உங்களுக்கு தமிழக அரசு நிச்சயமாக உறுதுணையாக இருக்கும்.
தமிழகத்தில் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க வேண் டும் என்பது முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் சிந்தனையில் உதித்த திட்டமாகும். 2006ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அதைக் கூறியதுடன், அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி னோம்.
இது மக்களின் நல்வாழ்வின்மீது அக்கறைகொண்ட அரசாகத் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வரும் இந்த வேளையில், நீங்கள் மருத்துவர்களாகச் சேவையாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் அனைவரையும் மனதார, உளமார, மகிழ்ச்சியுடன், பெருமையுடன் வருக, வருக என வரவேற்கிறேன்.
இந்த இனிமையான நேரத்தில் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்க நினைக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் கிராமப்புற மருத்துவச் சேவை என்பது பெரும் சவாலாக உயர்ந் திருக்கிறது. அதைக் கருத்தில்கொண்டு ஊரகப்புறங் களில் சேவையாற்ற நீங்கள் முன்வர வேண்டும்.

நகர்ப்புறங்களில் இருந்தும், கிராமப்புறங்களில் இருந்தும் வந்திருக்கும் நீங்கள், கிராமப் பகுதிக்குச் சென்று மருத்துவச் சேவை ஆற்றுவது கடமை என நினைத்துச் செயல்படுங்கள். நீங்கள் அனைவரும் மக்கள் மருத்துவர்கள் என்ற சிறப்பான பெயரை பெற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்” என முதல்வர் தெரிவித்தார்கள்.
நம்மை பொறுத்தவரை, முதல்வரின் வேண்டுகோளை நாம் வரவேற்கிறோம். இருப்பினும் கிராமப்புற சுகாதார சேவையில் தமிழகத்தை முதலிடத்தில் நிலைநிறுத்தி வரும் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே குறைவான, அவமானகரமான ஊதியம் தரப்படுவது’தான் மிகுந்த வேதனையளிக்கிறது என்பதை முதல்வருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
டாக்டர் கலைஞரின் திட்டமான மாவட்டமதோறும் மருத்துவக் கல்லூரி தொடங்குவதைச் செயல்படுத்தி வருவதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்கள். அதேநேரத்தில் டாக்டர் கலைஞர் கொடுத்த அரசாணை 35ன்படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்க அரசு மறுத்து வருவதுதான் வேதனை யாக உள்ளது.
மருத்துவர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு அரசு மருத்துவர்களுக்கு, எந்த அரசும் உறுதுணையாக இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

முதல்வர் சொல்வதைப் போலவே 18 ஆயிரம் அரசு மருத்துவர்களும் மக்கள் மருத்துவர் களாத்தான் பணியாற்றி வருகிறோம். அதிலும் குறிப்பாக மருத் துவர் நலனும், மக்கள் நலனும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்ற முழக்கத்துடன் பணியாற்றிய மருத்துவர் LN தன் உயிரையே தியாகம் செய்த பிறகும், அவர் வைத்த கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்பது மக்கள் மருத்துவருக்கு அரசு என்ன மரியாதை தருகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
எனவே தமிழகத்தில் மக்கள் மருத்துவர் ஒவ்வொருவரும் கனத்த இதயத்துடன் பணி யாற்றி வருகிறோம் என்பதை முதல்வருக்குத் தெரியப்படுத்தும் வகையில், மீண்டும் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லத் தயாராகி வருகிறோம் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம” என்றார் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை.
Recent Posts
- ராஜிவ் காந்தி – மறக்கமுடியாத மாமனிதர் -நினைவு நாள் செய்தி May 20, 2022
- வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு எப்படி வந்தார்? May 20, 2022
- தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் வி.என். ஜானகி நினைவு நாள் May 19, 2022
- டான் – திரை விமர்சனம் May 18, 2022
- ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு -சர்ச்சை May 18, 2022
- தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 20 | தனுஜா ஜெயராமன் May 18, 2022
- தலம்தோறும் தலைவன் | 3 | ஜி.ஏ.பிரபா May 18, 2022
- உலக உயர் ரத்த அழுத்த தினம் சிறப்புக் கட்டுரை May 17, 2022
- தில்லி மாதிரிப் பள்ளியை உருவாக்கிய பெண் எம்.எல்.ஏ. May 17, 2022
- விஜய் மக்கள்இயக்கம் நாமக்கல்லில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது! May 16, 2022
- நானும் கான்ஷிராமும்- பழைய நினைவுகள்! – மருத்துவர் ராமதாஸ் May 16, 2022
- தைரியமான பெண் படைப்பாளி அனுராதா ரமணன் May 16, 2022
- மீனாட்சி அம்மன் பக்தராகவே மாறிப் போன மதுரை கலெக்டர் ரவுஸ் பீட்டர் May 16, 2022
- பங்குச்சந்தையில் ஏன் ஏற்ற இறக்கங்கள் நிகழ்கின்றன? May 15, 2022
- சர்வதேச குடும்ப தினம் – 2022 செய்திக் கட்டுரை May 15, 2022
post by date
- May 2022 (53)
- April 2022 (90)
- March 2022 (87)
- February 2022 (109)
- January 2022 (87)
- December 2021 (83)
- November 2021 (92)
- October 2021 (83)
- September 2021 (34)
- August 2021 (45)
- July 2021 (76)
- June 2021 (112)
- May 2021 (92)
- April 2021 (32)
- March 2021 (40)
- February 2021 (5)
- January 2021 (58)
- November 2020 (91)
- October 2020 (90)
- September 2020 (47)
- August 2020 (104)
- July 2020 (102)
- June 2020 (160)
- May 2020 (105)
- April 2020 (7)
- March 2020 (15)
- February 2020 (215)
- January 2020 (357)
- December 2019 (514)
- November 2019 (475)
- October 2019 (328)
- September 2019 (214)
- March 2019 (1)
- September 2018 (1)