தோல்வியை வெற்றியாக்கிய பெண்

3 days ago
21

“இந்தியாவின் மிகப் பெரிய காபி ஷாப் நிறுவனமான கஃபே காபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா திடீர் தற்கொலை செய்துகொண்டார்!” என்று 2019ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி இந்திய நாளிதழ்கள் அனைத்திலும் முக்கியச் செய்தியாக இடம் பெற்றிருந்தது

இந்தியா முழுவதும் கஃபே காஃபி டே நிறுவனத்தை சித்தார்த்தா பல முன்னணி நிறுவனங்களோடு கடும் போட்டிப்போட்டு மிகப் பிரம்மாண்டமாக வளர்த்திருந்தார். நாடு முழுக்க 165 நகரங்களில் கிட்டத்தட்ட 575 கடைகள், ஆயிரக்கணக்கான ஊழியர் கள் என்று சிறந்து விளங்கியது இந்நிறுவனம்!

ஆனால் திடீர் நஷ்டம் காரணமாக அதன் உரிமையாளர் சித்தார்த்தா மங்களூருவில் உள்ள நேத்ரா நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதையே நம்ப மறுத்தனர் மிகப் பலரும்.

சித்தார்த்தா தனது நிறுவனத்தின் பங்குகளைவிட அதிகக் கடன்களை வாங்கி யிருந்ததாகவும் இதனால் முதலீட்டாளர்களின் நெருக்கடி மற்றும் வருமான வரித் துறையினரின் அழுத்தம் காரணமாக மனஉளைச்சலில் தவித்து வந்ததால் தற்கொலை முடிவை எடுத்ததாக அவரது கடைசிக் கடிதத்தின் வாயிலாக வெளி உலகுக்குச் சொன்னது கர்நாடகக் காவல்துறை.

அவரது நிறுவனக் கடன் தொகை 7,200 கோடி! இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டிப்போட, இந்த நிறுவனத்தின் எதிர்காலம் என்ன? 7,200 கோடி கடனை யார் அடைப்பது? இந்த நிறுவனத்தை நம்பியிருக்கும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களின் தலையெழுத்து என்ன? என்று பல்வேறு கேள்விகள் முன்வைக் கப்பட்டன.

மேலும் அந்த நிறுவனத்தின் கடன் தொகை காரணமாகப் பலரும் காபி டே நிறுவனத்தின் மீது அதிருப்தி அடைந்திருந்தனர். இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கணவனை இழந்து கடும் சோகத்தில் இருந்துவந்த சித்தார்த்தின் மனைவி மாளவிகா ஹெக்டே ஒரு அசாதாரணமான முடிவை எடுத்தார்.

அதன்படி கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் காபி டே நிறுவனத்தின் செயல் தலைவராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட மாளவிகா ஹெக்டே திறமையாக செயல் படத் தொடங்கினார்.

ஒருபுறம் கணவர் இறந்த சோகம், மறுபுறம் ரூ.7,200 கோடி கடனில் இருக்கும் நிறுவனம், மறுபுறம் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்க்கை. இப்படி பல சிரமங்கள் மாளவிகா ஹெக்டேவைச் சூழ்ந்தது. என்றாலும் மன தைரியத் தோடு எல்லாவற்றையும் எதிர்கொண்டார்.

மாளவிகா ஹெக்டே 1969ஆம் ஆண்டு கர்நாடகாவின் பெங்களூருவில் பிறந்தார். அவர் தனது பள்ளிப் படிப்பை பெங்களூருவிலும், பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பொறியியலும் படித்தார்.

இவரது தந்தை, சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா எனப்படும் எஸ்.எம். கிருஷ்ணா ஒரு முக்கிய இந்திய அரசியல்வாதி, வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் கர்நாடக முதல்வர் போன்ற பல முக்கிய பதவிகளில் பணியாற்றியவர். இவரது தாயார் பிரேமா கிருஷ்ணா ஒரு சமூக ஆர்வலர். அவருக்கு ஒரு தங்கை, சாம்பவி கிருஷ்ணா, அவரும் ஒரு தொழிலதிபர்.

மாளவிகா ஹெக்டே, பிரபல உணவுச் சங்கிலியான கஃபே காஃபி டேயின் உரிமையாளரான சித்தார்த்தாவை 1991இல் திருமணம் செய்து கொண்டார். அவர் களுக்கு இஷான் மற்றும் அமர்த்தியா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

சித்தார்த்தாவின் மரணத்துக்குப் பிறகு காபி டே நிறுவனம் காணாமல் போய் விடும் எனப் பலரும் கருதினர். அவருக்குப் பிறகு யார் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்து வார் என்ற கேள்விக்குறி இருந்தது.

ஏனெனில், ஏகப்பட்ட கடன் இருந்ததால் அந்த நிறுவனம் மீண்டு வரவே முடியாது என்று அந்த நிறுவனத்தில் இருந்தவர்களே பேசி வந்தனர். ஆனால் அத்தனை பேச்சு களையும் சுக்குநூறாக உடைத்து தனியொரு பெண்ணாக இருந்து சாதித்துக் காட்டியுனார் மாளவிகா ஹெக்டே. வளர்ச்சிக்காக அயராது உழைத்தார்.

பதவியேற்றதுமே, நிறுவனத்தின் கடன்களை நிறுவனம் நிச்சயம் திரும்பச் செலுத் தும் எனத் தெரிவித்தார். அவர் தனது வார்த்தையைக் காப்பாற்றினார். ஒரே வருடத் தில் நிறுவனத்தின் கடன் பாதியாகக் குறைந்தது. 7,200 கோடியில் இருந்து ரூ.3,100 கோடி ரூபாயாக கடன் முதலில் குறைக்கப்பட்டது.

பின்னர் விடாமுயற்சியின் பலனாக 2021ஆம் ஆண்டு மார்ச் காபி டே நிறுவனத்தின் கடன் சுமை ரூ.1,731 கோடியாகக் குறைந்தது. இது மிகப் பெரிய சாதனைதான். இதற் கிடையில் கொரோனா காலம் வேறு இருந்ததால், கடைகளைத் திறக்க முடியாத சூழல் உருவாகி இருந்தது.

அதை மீறி வருவதற்கு கூர்மையான திட்டங்கள் தீட்டி, பணியாளர்கள் சோர்வடை யாமல் பார்த்துக்கொண்டார். எல்லாத் தடைகளையும் தாண்டி கடனை வெகுவாகக் குறைந்து இன்று சிங்கப்பெண்ணாக நிமிர்ந்து நிற்கிறார்.

கடன் சுமையே இல்லாமல் ஆக்கி நிறுவனத்தை கோடி கோடியாக லாபம் ஈட்ட வைப்பதே மாளவிகாவின் இலக்காக உள்ளது. இது மாளவிகா ஏற்படுத் திய மாற்றம். இது ஊழியர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியது. நிறுவனத் தின் கடினமான காலங்களில் ஊழியர்கள் ஆர்வமாக இருந்ததாகவும், வங்கிகள் பொறுமையாக காத்திருந்ததாகவும் மாளவிகா ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

மேலும், தனது கணவரின் கனவுகளை நனவாக்கப் பாடுபடுவேன் என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார் மாளவிகா ஹெக்டே. இதுதான் பெண் சக்தி எனக் கொண்டாடுகிறார்கள், நிறுவன ஊழியர்கள்.

இறந்த தனது கணவரின் ஆசைப்படி, காபி டே கடைகளை நாட்டின் மூலை முடுக்கெங்கும் கொண்டுசெல்வதே மாளவிகாவின் கனவாக மாறியுள்ளது. சாதித்துக் காட்டுவதற்கு ஆண், பெண் என்ற வேறுபாடு தேவையில்லை. எந்த ஆதரவும், துணை யும் தேவையில்லை. அதற்கு மாளவிகா ஹெக்டே முன்னுதாரணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31