தவறுக்கு மன்னிப்பு கோரி ஈமெயில் அனுப்பிய கேபின் டெக் நிறுவனம்

 தவறுக்கு மன்னிப்பு கோரி ஈமெயில் அனுப்பிய கேபின் டெக் நிறுவனம்

இறுதி வரை விடா முயற்சியுடன்  மெயில் அனுப்பி தவறை உணர்த்திய மீச்சுவல் பண்ட் வாடிக்கையாளர்

நண்பர்களே, சில நாட்களுக்கு முன்பாக  எனது குவாண்ட் மீச்சுவல் பண்டில் புதிதாக ஒரு நபரைச் சேர்த்து , பின்பு நான் விழிப்படைந்து அந்தப் பெயரை நீக்கிய அதிர்ச்சித் தகவல் தெரிவித்திருந்தேன். இதன் தொடர்ச்சியாக குவாண்ட் மீச்சுவல் பண்டு மற்றும் கேபின்டெக்  நிறுவனத்திற்கும் பலமுறை மெயில் அனுப்பினேன். குவாண்ட் மீச்சுவல் பண்டு நிறுவனமோ, தவறு எங்கள் பக்கம் இல்லை. மீச்சுவல் பண்டு தொடர் பான அக்கௌன்ட் ஸ்டேட்மெண்டை நிறுவகிக்கும் பணிகளைச் செய்யும் கேபின் டெக்கை தான் தாங்கள் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.

மீண்டும் கேபின் டெக் நிறுவனத்துக்கு விடாமுயற்சி செய்து, குறிப்பு கால இடை வெளியில் 13 இமெயில்கள் அனுப்பினேன்.  ஆனால் கடைசி வரை அவர்களிடம் இருந்து எந்தவிதமான பதிலும் தரப்படவில்லை. என்ன செய்யலாம் என்று குழப்பமான நிலையில் இருந்தபோது, செபியில்  உள்ள ஸ்கோர்.காம்மில் சென்று கம்ப்ளைன்ட் செய்யலாம் என்கிற தகவல் தெரிந்தது. ஸ்கோர்.காம்மில் சென்று கேபின் டெக்குக்கு  எதிராக கம்ப்ளைன்ட் பதிவு செய்தேன். ஸ்கோர்.காம் மில் பதிவு செய்த பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் கம்ப்ளைன்ட்டில் ஸ்டேட்டஸ் சென்று செக் செய்த போது, குவாண்ட் மீச்சுவல் பண்ட்டில் கொடுத்த அதே பதிலை டிட்டோவாக கேபின் டெக் நிறுவனமும் மீண்டும் கொடுத்திருந்தார்கள். ஆனால் செபி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

மீண்டும் அவர்களை இதற்கு மன்னிப்புக்கோரி சரியான விளக்கம் கொடுங்கள் என்று தெரிவித்திருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் கழித்து எனக்குத் தொலை பேசி வழியாக கேபின்டெக்  மேலாளர் பேசினார். கேபின்டெக் நிறுவனத்தில் நடந்த தவறுக்குத் தான் மன்னிப்புக் கோருவதாகவும், இனி வரும் காலங்களில் இது போன்று நடைபெறாது என்றும், தங்களது நிறுவனத்தில் பேக் எண்ட் டீமில் இந்தத் தவறு தற்செயலாக நடந்துள்ளது என்றும் தெரிவித்தார். 13 மெயில்கள் அனுப்பி எனக்குப் பதில் தராதது ஏன் என்று நான் கேள்வி எழுப்பினேன் .  அதற்கும் அவர் மன்னிப்புக் கோரினார். 

என்னுடைய போலியோவில் சிங்கள் ஹோல்ட்டிங் என்பதை மாற்றவே முடியாத பெயரை  மாற்றி இருக்கும்பொழுது எனக்கு ஏன் எந்தவிதமான மெயில்,  மொபைல் நம்பருக்கு மெசேஜ் வரவில்லை என்று வினவினேன். அதற்கு மேலாளர் ,  நாங்கள் இதுவரை  மொபைல் நம்பர்,  ஈமெயில் ஐ.டி.,  பேங்க் அக்கவுண்ட் மாற்றம் , யூனிட்டை விற்றாலும், வாங்கினாலும் ஆகியவற்றிற்கு மட்டுமே மெசேஜ் , மெயில் வருவதற்கு சிஸ்டத்தில் பதிவு செய்துள்ளோம்.

ஆனால் ஒருவருடைய பெயரை சேர்க்கவே முடியாது என்கிற சூழ்நிலையில் அதற்கான மெஸேஜோ, மெயிலோ வருவதற்கான ஆப்ஷனை நாங்கள் கொடுக்கவில்லை. இது எங்களுக்குப் புதுவிதமான ஒரு தவறாகத் தெரிந்தது. இனி வரும் காலங்களில் இதற்கும்,( இதுபோன்று மாறாது) , அவ்வாறு மாறினால் மெயில், மெசேஜ் வருவதற்கான  ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். இதற்கு அடுத்ததாக இது போன்று தவறுகள் நடைபெறாமல்  சரிபார்க்க செக்கிங் நபரையும் நியமித்துள்ளோம். புதிய பெயரைச் சேர்த்து தவறு செய்த  நபர் மீது நாங்கள் தக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் தெரிவித்தார். 

அதனை மெயிலாக அனுப்புங்கள் என்று கூறினேன். மெயில் வழியாகவும் மன்னிப்புக் கேட்டுள்ளார்கள். இதில் இருந்து நமக்குத் தெரியவருவது என்னவென் றால், தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயமாக நாம் அவர்களது தவறைச் சுட்டிக்காட்டி பிறருக்கு இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் சரிசெய்ய முடியும் என்கிற நிலையை உணர்த்தவே இந்தப் பதிவை நான் இங்கே கொடுக்கின்றேன்.

சரியான நேரத்தில் இந்தத் தகவலை வாசகர்களிடம் கொண்டுசேர்த்த நாணய விகடன் இதழுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். நண்பர்களே தொடர்ந்து உங்களது பணத்தின் மீதும், உங்களது போலியோவின் மீதும் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். தக்க நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க உதவிய செபி  ஸ்கோர் மையத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மறப்போம், மன்னிப்போம் என்கிற முறையில் இந்தத் தவறு இனி வருங்காலங்களில் நடை பெறாது என்கிற நம்பிகையுடன்

எம்.எஸ்.லெட்சுமணன், காரைக்குடி.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published.