• கைத்தடி குட்டு
  • மோகன் லால்- பிரபு இணைந்து நடிக்கும் ‘மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம்’ பிரம்மாண்டப் படைப்பு!

மோகன் லால்- பிரபு இணைந்து நடிக்கும் ‘மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம்’ பிரம்மாண்டப் படைப்பு!

2 months ago
135
  • கைத்தடி குட்டு
  • மோகன் லால்- பிரபு இணைந்து நடிக்கும் ‘மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம்’ பிரம்மாண்டப் படைப்பு!

டைரக்டர் பிரியதர்ஷன் டைரக்‌ஷனில், கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம், `காலாபாணி.’ மோகன்லால் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு நடித்திருந்தார். பிரபு நடித்த முதல் மலையாளப் படம், அது. இந்தப் படத்தை தமிழில், `சிறைச்சாலை’ என்ற பெயரில் எஸ்.தாணு வெளியிட்டார்.
25 ஆண்டுகளுக்குப்பின், மோகன்லாலும், பிரபுவும் `மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்து இருக் கிறார்கள். இந்த படத்தையும் பிரியதர்ஷனே இயக்கி இருக்கிறார். தமிழில், `மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற பெயரில் எஸ்.தாணு வெளியிடுகிறார்.

மோகன்லாலுடன் சுனில் ஷெட்டி, அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், சித்தி, முகேஷ், சுஹாசினி மணிரத்னம், மோகன்லாலின் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடிய குஞ்சாலி மரைக்காயர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார். 

சரித்திரகாலப்  படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் பிரம்மாண்ட மாகத் தயாரித்துள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் 5,000திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளி யாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பால் இந்தப் படம் தள்ளிப்போனது. விரைவில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென் றிருந்தது மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படம்.

நடிகர்கள்: மோகன்லால், அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேணு, அசோக் செல்வன், பைசால், சித்திக், சுரேஷ் கிருஷ்ணா மற்றும் பலர்.

தொழில்நுட்பக்குழு :
எழுத்து & இயக்கம் – பிரியதர்ஷன்
தயாரிப்பு – ஆசிர்வாத் சினிமாஸ் (ஆண்டனி பெரும்பவூர்)
இணை தயாரிப்பு – DR ராய் CJ , சந்தோஷ் T குருவில்லா
தமிழ்நாடு வெளியீடு – V கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு
தயாரிப்பு வடிவமைப்பு – சாபு சிரில்
வசனம் – RP பால
ஒளிப்பதிவு – திருநாவுக்கரசு
இசை – ரோனி நபேல்
பின்னணி இசை – ராகுல் ராஜ், அன்கித் சூரி, லில் இவான்ஸ் ரோடர்
நடனம் – பிருந்தா, பிரசன்னா
நிர்வாக தயாரிப்பு – சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் டயல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31