ஆசிய பணக்காரர் பட்டியலில் அதானி முதல் இடத்தைப் பிடித்தார்

2 days ago
72

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்பதுதான் ஊடகங்களில் வைரலாகும் இன்றைய முக்கிய செய்தி.

இந்தியா ஏழை நாடா? பணக்கார நாடா? என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

அம்பானி சகோதரர்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வேகமாக வளர்ந்தார் கள். காங்கிரஸ் பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் பி.ஜே.பி.யின் பக்கம் சாய்ந்தார்கள் அம்பானி குருப். இந்தியா ஜனநாயக நாடுதான். ஆனால் ஒவ்வொரு கட்சியின் பின்னாலும் சில தொழில் அதிபர்கள் இருப்பார்கள். டாடா, பிர்லா, அம்பானி, பஜாஜ், மிட்டல் போன்ற நிறுவனங்கள் ஆட்சியில் யார் தலைமை ஏற்கவேண்டும் என்பதில்  மறைமுகமாகச் செயல்பட்டார்கள்.

ஆனால் தற்போது நேரடியாக ஆட்சிக் களத்தில் இறங்கிவிட்டார்கள். அம்பானி நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார் என்பது வெளிப்படை.

மோடி தலைமையில் பி.ஜே.பி. ஆட்சி அமைந்தவுடன் அதானிக்கே அனைத்து டென்டர்களும் வழங்கப்பட்டன. மோடியின் நிழல்போலப் பின்தொடர்ந்து வந்தார் அதானி. பி.ஜே.பி.யின் ஆசிர் வாதம் பெற்று பிரம்மாண்டமான தொழில் வளர்ச்சியில் செழித்து வளர்ந்தார் அதானி.

அதானி, அம்பானி, டாடா, பிர்லா ஆகிய எல்லா இந்தியப் பணக்காரர்களும் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் தங்கள் முதலீட்டை செய்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் பங்குகளை பெட்ரோல் கிணறு, பெட்ரோல் பங்குகள், ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து, அரசு நிறுவனங்களின் பங்குகளை வாங்குதல், டெலி கம்யூனிகேஷன், சில்லறை விற்பனையான சூப்பர் மார்க்கெட் வரை எதையும் விடுவதில்லை. இதற்காக மத்தியில் ஆட்சிக்கு வரும் கட்சிகள் அவர்களுக்காக சட்டத்தையும் வளைத்து அவர்களுக்காக வழிவிடுகிறார்கள் என்பது வெளிப்படையான தெரிந்து விஷயம்தான்.

கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து இந்தியாவில் சாமானிய மக்களின் வருமானம் மற்றும் சம்பள அளவீடுகள் குறைந்தது மட்டும் அல்லாமல் உணவு பொருட்கள் முதல் கார், பைக் வரையில் அனைத்து பொருட்களின் விலையிலும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது.

இப்படிச் சாமானிய நடுத்தர மக்களின் வாழ்வு கடுமையாகப் பாதித்துள்ள வேளையில் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் சமூகநீதி, பொருளாதாரம், வாழ்வாதாரம் சமஅளவில் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அடிமை வெள்ளை அரசிடமிருந்து இந்தியாவை மீட்டு குடியரசாக ஆக்கியது. அது இன்று பெயரளவில்தான் உள்ளது.

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானி உலக பணக்காரர் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் முகேஷ் அம்பானியை முந்தி அதானி ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பெருமையை பெற்று இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து ஆசியாவின் முதல் பெரும் பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானி 2வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அதிகரித்துக்கொண்டே வந்தது என்பதும் அவரது நிறுவனங்களின் பங்கு மார்க்கெட் மதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 4.12 லட்சம் கோடி ரூபாயை அதிகரித்துள்ளது.

ஆனால் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடி மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது. பங்கு வர்த்தகத்தில் முகேஷ் அம்பானி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்து கொண்டே வரும் நிலையில் இன்னொரு பக்கம் அதானி நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து கொண்டே வருவதால் அம்பானியை அதானி முந்திவிட்டார்.

அதானியின் சொத்து மதிப்பு 6.60 லட்சம் கோடி என்றும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு அதைவிட குறைவாக சரிந்துள்ளதை அடுத்து இந்தியா மட்டுமின்றி ஆசிய அளவிலும் நம்பர் ஒன் பணக்காரராக அதானி உயர்ந்து உள்ளார்.

தற்போது ப்ளூம்பெர்க் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் முகேஷ் அம்பானி 90 பில்லியன் டாலர், கௌதம் அதானி 88.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருந்தாலும், ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பீட்டை கணக்கிடும்போது முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கௌதம் அம்பானி இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும் பணக்காரர் ஆகியுள்ளார்.

சமீபத்தில் சவுதி ஆராம்கோ நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யவில்லை எனத் தெரிவித்தது. இதனால் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்சின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இன்றைய வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் பங்குகளை சுமார் 1.4 சதவிகிதம் சரிந்து 2350.90 ரூபாய் அளவில் தொட்டது.

ஆனால் கவுதம் அதானியின் பங்கு மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்மூலம் அதானி குடும்பத்தின் மொத்த சந்தை மதிப்பு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மதிப்பை விடவும் அதிகரித்துள்ளது. அதனால் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் அதானியின் பிரம்மாண்ட வளர்ச்சி அதானி குழுமத்தின் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களின் பங்கு விலை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள காரணத்தால் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ஒரே வருடத்தில் முதல் இடத்தில் வந்துள்ளார்.

கடந்த ஆண்டு கணக்கின்படி இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் ஒரு நாள் வருமானம் என்ன தெரியுமா?

முகேஷ் அம்பானி – 163 கோடி ரூபாய்

கௌதம் அதானி – 1,002 கோடி ரூபாய்

ஷிவ் நாடார் – 260 கோடி ரூபாய்

எஸ்.பி. ஹிந்துஜா – 209 கோடி ரூபாய்

லட்சுமி மிட்டல் – 312 கோடி ரூபாய்

சைரல் எஸ் பூனவாலா – 190 கோடி ரூபாய்

ராதாகிஷன் தமனி – 184 கோடி ரூபாய்

வினோத் அதானி – 245 கோடி ரூபாய்

குமார் மங்களம் பிர்லா – 242 கோடி ரூபாய்

ஜே சவுதிரி – 153 கோடி ரூபாய்

உங்களுடைய ஒருநாள் வருமானம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930