இமெயில் கண்டறிந்த தமிழர் சிவா அய்யாத்துரை

3 days ago
66

அய்யாதுரை டிசம்பர் 2, 1963 இல் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார் 7 வயதில் தன் குடும்பத்தாருடன் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறி னார். இவர் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற எம்.ஐ.டி என்னும் பல்கலைக்கழகத்தில் இளநிலை மின் பொறியியல், கணினி அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றார். பின்னர் அனிமேஷன் துறையில் முதுநிலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் எ.ஐ.டி-யில் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்றார்.

இவர் இந்தியாவில் சென்று படிக்க, 2007-2008 ஆம் ஆண்டுக்கான புல்பிரைட்டு மாணவர் படிப்புதவி விருதைப் பெற்றார்.

2007ஆம் ஆண்டு இவர் உயிரியப் பொறியியல் ([biological engineering) துறையில் எம்.ஐ.டி.யில் இருந்து முனைவர் பட்டம் பெற்றார்.

இவர் மின்னஞ்சல் (“EMAIL”) என்று பெயரிட்டு பெயருக்கு காப்புரிமை எடுத்த மின்னஞ்சல் மேலாண்மை மென்பொருள் (Email Management System) உருவாக்கிய தற்காக அறியப்படு கிறார். இவர் தானே மின்னஞ்சலின் கண்டுபிடிப்பாளர் என்று கூறி, அதனை சில மைய ஊடகங்கள் பதிவுசெய்துள்ளன. இக் கூற்று சர்ச்சைக்குரியது ஆகும்.

இவர் 1978இல் உயர்நிலைப்பள்ளியில் இருந்தபொழுதே மின்வழி அஞ்சல் களை அனுப்பும் மின்னஞ்சல் முறைமையும், மின்னஞ்சல் என்பதை “EMAIL” என்னும் பெயரிலும் உருவாக்கி நிறுவியவர். இதற்கான காப்புரிமத்தை ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிமை அலுவலகத் தில் இருந்து 1982இல் பெற்றுள்ளார். இன்று “email” என்னும் பொதுவழக்குப் பெயரோடு (generic name) இவர் ஆக்கிய மின்னஞ்சல் என்னும் முறையை ஒத்திருப்பதால், இது பற்றி நிறைய கருத்து வேறுபாடுகளும், கணினி வரலாற்றில் சிவா அய்யாதுரை யின் இடம் பற்றியும் மாறுபாடுகள் கொண்ட கருத்துகள் பலவும் இருந்து வருகின்றன.

இந்தப் கருத்துக்கள் வரும் முன்னர் மின்னஞ்சலின் தொடக்கம் பற்றி எந்த மாறுபட்ட கருத்துகளும் இல்லை என்று அர்ப்பாநெட்டு (ARPANET) ஆய்வுக் குழுமத்தைச் சேர்ந்த இடேவிடு கிரோக்கர் (David Crocke) கூறுகின்றார். வாஸிங்டன் போஸ்ட் (Washington Post) என்னும் நாளிதழில் மின்னஞ்சல் வரலாறு பற்றி எழுதும்பொழுது, மின்னஞ்சலுக்கான தொழில்நுட்பக்கூறுகள் பல ஆய்வாளர்களிடம் இருந்து வந்தன என்றும் அர்ப்பாநெட்டின் நெடுங்கால பயன்பாட்டில் நிலைபெற்றிருந்த மின்னஞ்சலை, 14-அகவை நிரம்பிய ஒருவர் 1970-களின் பிற்பகுதியில் கண்டுபிடித்தார் என்பது பிழையான செய்தி என்றும் கூறுகின்றார்.

தாம்லின்சனும், தாம் வான் விளெக்கும் (Tom Van Vleck), மற்றவர்களும்செய்தது குறிப்புகள் அனுப்பும் முறையே அன்றி அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்துக்கு அனுப்பும் ஒருங்கிணைந்த மின்னஞ்சல் முறை அன்று என்று அய்யாதுரை கூறுகின்றார். தன்னுடைய கூற்றுகளைப் பற்றிக் குறை கூறுபவர்களுக்கு மறுப்புரையாக தன்னுடைய வலைத்தளத்தில் அய்யாதுரை தன்னுடைய “EMAIL”ஐ முழுவதும் ஒருங்கிணைக்கப் பெற்ற தரவுதளத்தால் இயக்கப்பெற்று தாள்களில் பரிமாறப் பெற்ற அஞ்சல் முறையை மின்முறை யாகப் பெயர்த்த முதல் வகையான மின்னஞ்சல் முறை என்று கூறுகின்றார். இன்று “Gmail”, “Hotmail” போன்ற வலை-முகப்புடன் இயங்கும் மின்னஞ்சல் களில் உள்ளது போலவே பல கூறுகளையும் கொண்டிருந்த முதல் அமைப்பு என்கிறார். அவரின் பதிலுரை கீழே…

”நான் 1978ல் இமெயிலை ஒரு தமிழனாக இமெயிலைக் கண்டுபிடித்ததில் பெருமையடை கிறேன். இதை இவ்வளவு காலம் கழித்து சொல்ல வேண்டி யிருக்கிறது. காரணம் அப்போது இதைப் பிரபலம் பண்ணும் அளவிற்கு என்னிடம் வழக்கறிஞரோ அல்லது உடனிருந்து வழி நடத்துவதற்கான நபரோ இல்லை. பதினான்கு வயது சிறுவன் என்ன செய்வான். காப்பி ரைட் பற்றி அவனுக்கு என்ன தெரியும்? ஆனால் இப்போது உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் இது.

நம்மிடம் உள்ள ஒவ்வொரு இந்தியக் குழந்தையும், ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் இதைக் கண்டுபிடித்தது. ஒரு 14 வயது இந்தியப் பையன், தமிழ்ப் பையன் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். 14 வயது இந்திய பையனால் முடியும் என்றால் எல்லா இந்தியராலும் முடியும்.

மனைவியுடன்

ஏழு வயதில் அமெரிக்கா போனேன். போன இடம் அங்கே ஏழைகளின் நகரமான பேட்டர்சன். பலரும் நினைப்பது போல அமெரிக்காவில் எல்லாருக் கும் எல்லாம் உண்டு என்பது மாயை. அங்கும் ஏழைகளின் ஊர், பணக் காரர்களின் ஊர் வெள்ளையர்களின் ஊர், கறுப்பர்களின் ஊர் என்று பாகுபாடுகள், பிரிவினைகள் உண்டு.

நாங்கள் பேட்டர்சன் நகரத்திலிருந்து படிப்படியாக வசதியான லிவிங்ஸ்டன் -நியூஜெர்ஸி நகரத்துக்குச் சென்றோம். எனக்கு இது புதிராக இருந்தது. ஆனாலும், படிப்பில் கணிதத்தில், மருத்துவத்தில் எனக்கு மிகவும் ஆர்வம். கல்லூரிக்கான பாடத் திட்டத்தை 9 வயதில் முடித்தேன். அதற்குமேல் படிப்பதற்கு இல்லை. எனவே 1978ல் நியூயார்க் பல்கலைக்கழகம் அமெரிக்கா வில் 40 மாணவர்களைத் தேர்வு செய்து மென்பொருள் பயிற்சி கொடுத்தது. அதில் தேர்வான ஒரே இந்தியன் நான்தான்.

அப்போதே 7 புரோகிராம் லாங்வேஜ்களை முடித்திருந்தேன். மேலும் 6 புரோகிராம் லாங்வேஜ்களை முடித்தேன். நியூயார்க் என்கிற ஊரில் 3 மருத்துவக் கல்லூரி நடத்திய மைக்கேல்சன் என்பவர் எனக்கு ஒரு வேலை கொடுத்தார். அங்கு நான் போனபோது 14 வயதுதான். வேலை பார்த்தவர்கள் 30 வயது 40 வயது கொண்டவர்கள். ஆனால் மைக்கேல்சன் எனக்கு அவர்களுக்குச் சமமான மரியாதை கொடுத்தார். சம்பளமும் கொடுத்தார். இது முழுக்க முழுக்க என் தகுதி பார்த்து கொடுத்தது. அப்போதே 14, 15 செமினார் கூட நடத்தினேன்.

எனக்கு ஒரு சவாலான வேலை கொடுத்தார். அங்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் கணினிகளை இணைப்பது சிரமமாக இருந்தது. நிறைய மனித உழைப் பைச் சாப்பிட்டது. சிக்கலாகவும், சிரமாகவும் இருந்தது. இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கவும், 30 அலுவலகங் களை இணைத்து 3 கல்லூரிகளை இணைப் பது எப்படி எனக் கண்டுபிடிக்கவும் சொன்னார். அப்படி கண்டுபிடிக்கப் பட்டதுதான் இமெயில்.

அப்போது அப்பர் கேஸில் 5 கேரக்டர்கள் மட்டுமே வர முடியும். எனவேதான் Email என்று பெயர் வைத்தேன். இதுதான் இமெயில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு. இதுமாதிரி புதுமாதிரியான கண்டுபிடிப்புகள் எல்லாம் ஆங்கிலேயருக்கு மட்டுமே உரிமையானது, தகுதியுள்ளது என்பது அவர்கள் நினைப்பு. எனவே எனக்கு எதிராக ‘ரேட்டியான்’ என்கிற கும்பல் மோசடிகள், போர்ஜரியில் ஈடுபட்டு என்னை வம்புக்கு இழுத்தார்கள். நான் அவர்களுடன் மோதி வெற்றி பெற்றேன். இமெயில் என்றால் அது ‘சிவா அய்யாதுரைதான்’ என்று வெற்றி பெற்றேன். அதுவரை ‘இமெயில்’ என்கிற வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி யில் இல்லை. 1978க்குப் பிறகுதான் எல்லா டிக் ஷனரியிலும் வந்தது” என்றார் அய்யாதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930