49 பிரபல நடிகர்கள் நடிக்கும் ராஜ வம்சம்

3 days ago
60

நடிகர் சசிகுமாரின் நடித்த படம் ராஜவம்சம் நகைச்சுவை மற்றும் குடும்பத் திரைப்படம்.  இப்படத்தை புதுமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குநர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

இந்தப் படத்தில் சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றாற்போல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தயாராகிறது. இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டிராஜா தயாரித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை, பொள்ளாச்சி, பேங்காக் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இப்படத்தின் இயக்குநர் K.V.  கதிர்வேலு  இத்திரைப்படத்தினைப் பற்றி “இது குடும்பப்படமாகவும், தற்போது நாட்டிற்கு தேவையான ஒரு கருத்தும் இப்படத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது” என்று கூறியுள்ளார்,

இயக்கம்- KV  கதிர்வேலு  தயாரிப்பு -செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் (டிடி.ராஜா, DR சஞ்சய் குமார் )  ஒளிப்பதிவு – சித்தார்த்  இசை  – சாம்.சிஎஸ் கலை இயக்கம் – சுரேஷ் களரி  எடிட்டிங் – சபு  ஜோசப்  நடனம் – ராஜு சுந்தரம், சாண்டி, தஸ்தா  சண்டை பயிற்சி – திலீப் சுப்ராயன்  நிர்வாக தயாரிப்பு – N .சிவகுமார்,  தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன் பரமசிவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930