• கைத்தடி குட்டு
  • ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’கலைப்புலி S. தாணு வெளியிடும் பிரம்மாண்ட படைப்பு

‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’கலைப்புலி S. தாணு வெளியிடும் பிரம்மாண்ட படைப்பு

1 week ago
65
  • கைத்தடி குட்டு
  • ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’கலைப்புலி S. தாணு வெளியிடும் பிரம்மாண்ட படைப்பு

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான படம் தான் ‘காலாபானி’. மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபு நடித்த முதல் மலையாளப் படமும் அதுதான்.

இப்படத்தைத் தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் கலைப்புலி S தாணு வெளியிட்டார். தற்போது ‘காலாபானி’ வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் மீண்டும் மோகன்லாலும் பிரபுவும் மலையாளப் படமான ‘மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படத்தை யும் பிரதர்ஷனே இயக்குகிறார். தமிழில் இப்படம் மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் எனும் பெயரில் கலைப்புலி S. தாணு வெளியிடுகிறார்.

மேலும் இத்திரைப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ், நெடுமுடி வேணு, அசோக் செல்வன், பைசால், சித்திக், சுரேஷ் கிருஷ்ணா போன்ற நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள். .

திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார், M.S. ஐயப்பன் நாயர் படத்தொகுப்பினை கவனிக் கிறார். ரோனி நபேல் இசையமைக்கிறார். R.P. பாலா இப்படத்திற்கு வசனங்களை எழுதி யுள்ளார். இதற்கு முன்பு மோகன்லால் படங்களான புலி முருகன், லூசிபர் ஆகிய பிரம்மாண்ட வெற்றிப் படங்களுக்கு வசனங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் டிசம்பர் 2ஆம் தேதி தமிழக மெங்கும் V கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி S. தாணு பிரம்மாண்டமாக வெளியிடுகிறார். .

இப்படத்தைப் பற்றி கலைப்புலி S. தாணு பேசும்போது, “சிறைச்சாலை என்னும் பிரம்மாண்ட படைப்பில் உருவான இந்தக் கூட்டணி, 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நம் மக்களை பிரமிக்கவைக்கும் ஒரு காவியப் படைப்பை வெளியிடு வதில் பெருமை கொள்கிறேன்.” என்றார்.

தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் – பிரியதர்ஷன்
தயாரிப்பு – ஆசிர்வாத் சினிமாஸ் ( ஆண்டனி பெரும்பவூர்)
இணை தயாரிப்பு – DR ராய் CJ , சந்தோஷ் T குருவில்லா
தமிழ்நாடு வெளியீடு – V கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு
தயாரிப்பு வடிவமைப்பு – சாபு சிரில்
வசனம் – RP பாலா
ஒளிப்பதிவு – திருநாவுக்கரசு
இசை – ரோனி நபேல்
பின்னணி இசை – ராகுல் ராஜ் , அன்கித் சூரி ,லில் இவான்ஸ் ரோடர்
நடனம் – பிருந்தா , பிரசன்னா
நிர்வாக தயாரிப்பு – சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் டயல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930