• கைத்தடி குட்டு
  • 5 வயது குழந்தைகள் டி.வி., செல்போன் பார்ப்பதைத் தடுக்க வேண்டும்! -டாக்டர்கள் அறிவுரை

5 வயது குழந்தைகள் டி.வி., செல்போன் பார்ப்பதைத் தடுக்க வேண்டும்! -டாக்டர்கள் அறிவுரை

2 months ago
152
  • கைத்தடி குட்டு
  • 5 வயது குழந்தைகள் டி.வி., செல்போன் பார்ப்பதைத் தடுக்க வேண்டும்! -டாக்டர்கள் அறிவுரை

கொரோனா பொதுமுடக்கம், பள்ளிகள் விடுமுறை ஆகிய காரணங்களால் வீட்டிலுள்ள குழந்தைகள் எப்போதும் செல்போனும் கையுமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் செல்லமாக நாம் குழந்தை களுக்கு அறிமுகப் படுத்தும் செல்போன், அவர்களின் வாழ்க்கையையே சீரழிக்கும் வல்லமை கொண்டது என்று எச்சரிக்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.

சென்னை எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் 17-11-2021 அன்று குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை சார்பில் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஆஸ்பத்திரி இயக்குநர் டாக்டர் எழிலரசி தலைமை தாங்கினார். அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் வேல்முருகன், மூத்த டாக்டர்கள் செந்தில்நாதன், ஹரிகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், பெற்றோர் தங்களது குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்பது குறித்து டாக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன்படி, பட்டாசு விபத்துகள், திராவகம் மற்றும் பிளீச்சிங் பவுடர் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் விபத்துகள், பேட்டரி, காந்தங்களை குழந்தைகள் விழுங்குவதால் ஏற்படும் பாதிப்பு, சாலை விபத்துகள், சிறுநீரகம் பாதிப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு களை தடுப்பது குறித்தும், பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை வழிமுறைகள் குறித்தும் மருத்துவ மாணவர்கள் காணொலி காட்சி மூலமாகக் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் விளக்கினர்.

ஏற்கெனவே பல்வேறு விபத்துகளில் காயம் அடைந்து, ஆபத்திரியில் சிகிச்சை பெற்ற குழந்தை களின் புகைப்படங்கள் மூலம், பெற்றோருக்கு டாக்டர்கள், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது டாக்டர் வேல்முருகன் கூறும்போது, ‘குழந்தைகள் வீட்டில் விளையாடினாலும், சாலை யில் சென்று விளையாடினாலும், குழந்தை களைப் பெற்றோர் தங்களது கண்காணிப்பிலே வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் விபத்துகளில் 30 சதவிகித விபத்துகள் பெற்றோரின் கவனக்குறைவால் மட்டுமே ஏற்படுகிறது.

தற்போது அதிகளவில் நடந்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தவிர்க்க, பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு, நல்ல தொடுதல், கெட்ட தொடுதலை கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண் டும். மேலும் குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் செல்போன், டி.வி. பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர்கள், குழந்தைகளின் பெற்றோர், ஆஸ்பத்திரி மக்கள் தொடர்பு அதிகாரி கங்காதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பல மணி நேரம் உட்கார்ந்தபடி செல்போன் பயன்படுத்துவதால் குழந்தை களின் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன. விளையாட்டுகளில் ஈடுபடாமல் தொடுதிரையை விரல் களால் தேய்த்துக் கொண்டிருக்கும் பழக்கம் குழந்தைகளின் விரல்கள் மற்றும் கைகளின் செயல்திறனை முடக்குகிறது. மேலும், குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடப்பதால், வெயிலில் அலைந்து உடல் பெறும் அவசியமான வைட்டமின்கள் எதுவுமே அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அதோடு உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவையும் வந்து விடுகிறது.

ஒளிரும் திரையைப் பல மணி நேரம் குழந்தைகள் பார்ப்பதால் அவர்களுக்குப் பல் கண் பிரச்சினை கள், பார்வைத் திறன் குறைபாடுகள் உருவாகிறது. முக்கியமாக, தொடர்ந்து செல்போனிலேயே மூழ்கியிருப்பதால் குழந்தைகளின் பேச்சுத் திறனும் பாதிக்கிறது. மற்றவர் களோடு பழகவோ பிற குழந்தைகளோடு இணைந்து விளையாடவோ தெரியாமல் இக்குழந்தைகள் தனிமைப்பட்டு விடுகின் றனர். செல்போனிலிருந்து வெளி யாகும் ரேடியோ கதிர்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக் கின்றன என்பதைப் பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

ஊரடங்கு காலத்தில். பெற்றோர் தங்கள் குழந்தைகளை வெளியில் விளையாடக்கூட அனுமதிக்க முடியவில்லை. எனவே அவர்கள் செல்போன் மற்றும் டி.வி. பார்ப்பதில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர்.

வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால் குறிப்பாக செல்போனில்தான் அதிகளவு நேரத்தை செலவிடு வதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் களின் கண்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மாணவர்கள் அதிகநேரம் செல்போன் பார்ப்பதால் அவர்களுக்குக் கண்களில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அப்போது கண்களைக் கசக்கினால் கண் எரிச்சல் வர வாய்ப்பு உள்ளது. மேலும் கண்களில் நீர்சத்து குறைவதால் அலர்ஜி ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. செல்போனை ஒரு மணி நேரத்திற்கு மேலாகத் தொடர்ந்து பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் கண்ணில் கட்டி உருவாகும். கண்களில் நீர்சத்து பிரச்சினையை சரிசெய்ய கண் சிமிட்டலை அதிகப்படுத்த வேண்டும். தண்ணீர் அதிகளவில் குடிக்கவேண்டும். கீரை, காய்கறிகள், பழங்கள், முட்டை, பால் மற்றும் மீன் போன்றவைகளை உணவில் சேர்த்து வரவேண்டும். முக்கியமாக கேரட், பப்பாளி, இனிப்பு பூசணிக்காய் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதேபோல் டி.வி. அதிக நேரம் பார்க்கும்போது கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. மேலும் தற்போது பள்ளி மாணவர்கள் 4 முதல் 6 மணி நேரம் வரை கணினி முன்பு அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து கணினி பயன்படுத்துவதால் கண் வலி, தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க கணினி பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள் இருக்கையின் உயரமும், கணினியின் உயரமும் சமமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 

இதேபோல் ஆன்லைன் வகுப்பை செல்போனில் பார்க்கும்போது சரியாக அமர்ந்துகொண்டு செல்போனை கையில் வைத்துக்கொண்டு பார்க்கலாம். படுத்துக்கொண்டு செல்போன் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும். முக்கியமாக இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு இருட்டில் செல்போன் பார்ப்பதைத் தவிப்பது நல்லது.

செல்போன், டி.வி.யில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் மழலை வகுப்பில் சேரும்போதே உடல் இயக்க செயல்பாட்டு பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கு சிங்கப்பூரை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டனர். ஆய்வின் முடிவில் இரண்டு முதல் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் செல்போனை, தினமும் மூன்று மணி நேரம் அல்லது அதற்கு அதிகமாக பார்த்தால் அவர்களின் உடல் வளர்ச்சியும், உடல் இயக்க செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாவது கண்டறியப்பட்டுள் ளது. 5 வயதுக்குள் சுறுசுறுப்பு தன்மை குறைந்து போய்விடுவதும், பள்ளிக்கூடத்திற்குச் செல்வதற்கு முன்பாக அவர்களது உடல் இயக்கத் திறனில் பாதிப்பு வெளிப்படுவதும் தெரியவந்துள்ளது.

அதனால் பெற்றோர்களே குழந்தைகளிடம் செல்போன் தருவதைப் பார்த்துக் கையாளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31