23rd October 2021

உதயநிதி பிரம்மாண்ட தயாரிப்பில் அரண்மனை-3

2 weeks ago
35

குடும்பங்கள் சிரித்துக் கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை-2 போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங் களும் குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள். அரண்மனை முதல் இரண்டாம் பாகங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு  தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா நடிப்பில் அரண்மனை 3  திரைப்படம்  உருவாக்கப்பட்டு ரிலீஸுக்குத் தயாராகி உள்ளது. அவ்னி  சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரிக்க C.சத்யா  இசையமைக்கிறார் .

ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாபாத் திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா, மனோபாலா, சம்பத், சாக்‌ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று (10-10-12021) நடைபெற்றது.

இயக்குநர் சுந்தர் சி பேசியவை,

“நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அரண்மனை பாகங்கள் இரண்டும் நீங்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவுடன் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. எல்லோரும் சொல்வார்கள் அரண்மனை படத்தை ஈசியாக எடுத்து விட்டீர்கள் என்று. ஆனால் அது மிகவும் கஷ்டம். இந்த மாதிரியான படங்களை  மக்கள் விரும்புமாறு கொடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஏற்கெனவே உள்ள விஷயங்களைவிட கொஞ்சம் வேறுபட்டதாக இருக்க வேண்டும். அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களுமே நல்ல வசூலையும் வெற்றியும் தந்தது. ஆனால் உடனடியாக அதன் அடுத்த பாகத்தை எடுக்க முடியாது. அதற்கான கதையும் நடிகர்கள், தொழில்நுட்ப குழுக்களும் அமைந்தால் மட்டுமே சாத்தியம்.

மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல் நடித்துக் கொடுத்துவிட்டு செல்லாமல் பிசினஸ் ரீதியாக எனக்கு உதவியாக இருந்தார் ஆர்யா.

அரண்மனை படம் என்றாலே நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்திலும் ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக் ஷி அகர்வால் எல்லாருக்குமே முக்கிய கதாபாத்திரம்தான்.

அரண்மனை பாகம் 1 உதயநிதி அவர்கள் வெளியிட்டார். .தற்போது அரண்மனை 3 திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் வெளியிடுகிறார். இந்தப் படத்தைப் பார்த்த ஒரே நபர் உதயநிதி அவர்கள் மட்டும்தான்.

அரண்மனை 1 படத்தைப் பார்த்துக் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று சொன்னவரும் அவர்தான். தற்போது அரண்மனை 3 படத்தைப் பார்த்துவிட்டு அருமையாக இருக்கிறது என்று சொன்னவரும் அவர் தான். என்னுடைய படங்கள் எல்லாமே கமர்சியல் படங்கள்தான். படத்தைப் பார்க்கின்ற சிறுவர்கள், பொதுமக்கள், தாய்மார்கள் அனை வருமே கவலையை மறந்து ரசிக்க வேண்டும் என்பதுதான் என்னு டைய நோக்கம். அரண்மனை இரண்டு பாகங்களைவிட அரண்மனை 3 பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

நடிகர் ஆர்யா பேசியவை,

“இந்தப் படத்தில் நடிப்பதற்காக சுந்தர்.சி சாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவரை சந்தித்தேன் இந்தப் படத்தில் நடிப்பது பற்றி அவரிடம் சொன்னபோது ‘பேய் படத்தில் எனக்கு எப்படி நடிப்பது என்று தெரியவில்லையே’ என்று கூறினேன். ‘அது மிகவும் ஈசிதான். நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொன்னார். இப்படத்தில் விவேக்  சாருடன் நடித்தது  மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவருடன் பயணித்த அந்த 40 நாட்கள் மறக்க முடியாதவை. நான் அவரது மிகப்பெரிய ரசிகன். இந்தப் படத்தில் நடித்த அனைவருமே மிகச் சிறப்பாக நடித் துள்ளனர். இப்படத்தில்   பாடல்கள் மிகவும் சிறப்பாக இசையமைத் துள்ளார் சத்யா. இப்படத்தை வெளியிடும் ரெட் ஜெயின்ட் உதயநிதி அவர்களுக்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.

நடிகை ராஷி கண்ணா பேசியவை,

“இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த சுந்தர் சி, குஷ்பூ ஆகியோ ருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்யா கடின உழைப்பாளி. அரண்மனை 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது ‘சார்பட்டா பரம்பரை’ படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். இந்தப் படத்தை வெளியிட்டு சப்போர்ட் செய்யும் உதயநிதி அவர்களுக்கு நன்றி. கண்டிப்பாக இந்தப் திரைப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக் கும் .தியேட்டரில் இப்படத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.

இசையமைப்பாளர் C .சத்யா பேசியவை,

“இந்தப் படம் எனக்கு 25வது படம். இசையமைப்பாளராக இசை அமைத்துள்ளேன். இந்தப் திரைப்படத்திற்குப் பின்னணி இசை அமைப்பதில் எனக்கு அதிக நாட்கள் தேவைப்பட்டது. 20 நாட்களில் முடிக்குமாறு என்னை இயக்குநர் கேட்டுக் கொண்டார். ஆனால் இந்த லாக்ஃடௌன் எனக்கான நாட்களை அதிகப்படுத்தியது. அதிக நாட்கள் எடுத்துக்கொண்டு சிறப்பாகப் படத்திற்கு இசை அமைத்துள்ளேன். அரண்மனை படம்  மற்ற பாகங்களைவிட இந்த மூன்றாம் பாகத்தில் எமோஷனல் சீன்கள் அதிகமாக இருக்கின்றன.” என்றார்.

நடிகர் மனோபாலா பேசியவை

“குஜராத்தில் கிட்டத்தட்ட 40 நாட்கள் மேலாகத் தங்கியிருந்து படப்பிடிப்பு முடித்தோம். மறக்க முடியாத நினைவுகள். காலையில் 7 மணிக்கு ஷூட்டிங் சென்றுவிட்டு இரவு பத்து மணிக்குத் திரும்பு வோம். படப்பிடிப்பு போவதே தெரியாது. இதில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விவேக் சாருடன் நடித்த அந்த நாட் கள் மறக்க முடியாதவை. அவரின் இழப்பு வருத்தத்தை அளிக்கிறது.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

October 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031