• கைத்தடி குட்டு
  • உ.பி., தேர்தலில் அசாதுதீன் ஓவைசி கட்சி ; கடும் கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்

உ.பி., தேர்தலில் அசாதுதீன் ஓவைசி கட்சி ; கடும் கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்

2 months ago
59
  • கைத்தடி குட்டு
  • உ.பி., தேர்தலில் அசாதுதீன் ஓவைசி கட்சி ; கடும் கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்

உ.பி., தேர்தலில் அசாதுதீன் ஓவைசி கட்சி; கடும் கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்

லக்னோ-உத்தர பிரதேச சட்டசபைக்கு அடுத்தாண்டு துவக்கத்தில் நடக்க உள்ள தேர்தலில், அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி போட்டியிட உள்ளது. இதனால், முஸ்லிம்களின் ஓட்டு களை நம்பியுள்ள கட்சிகள் சற்று கலக்கத்தில் உள்ளன.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில் இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் தங்கள் கட்சி 100 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் ஓவைசி அறிவித்துள்ளார். ஓம் பிரகாஷ் ராஜ்பர் தலைமையிலான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியுடன் அவர் கூட்டணி அமைத்து உள்ளார்.

இது குறித்து அரசியல் வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:மாநில மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 19 சதவீதமாக உள்ளது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கே முஸ்லிம்களின் ஓட்டுகள் கிடைத்து வருகின்றன. ஆனால், முஸ்லிம்களுக்கு அந்த கட்சிகளில் பெரிய அளவில் பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்பது ஓவைசி கட்சியின் வாதம்.முஸ்லிம்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுவதாக ஓவைசி கூறி உள்ளார். ஆனால், அவரது இந்த வாதம் இங்கு எடுபடுமா என்பது சந்தேகமே. இருந்தாலும், தங்கள் கட்சிக்கான ஓட்டுகள் பாதிக்கப்படலாம் என, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் இடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930