• ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (28.08.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (28.08.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

4 weeks ago
1327
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (28.08.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் சம்பந்தமாக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். குழந்தைகளின் மூலம் மதிப்புகள் உயரும். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரணி : பாராட்டுகளை பெறுவீர்கள்.
கிருத்திகை : தேவைகள் நிறைவேறும்.

ரிஷபம் :

உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில செயல்கள் நிறைவேற அலைச்சல்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : பொறுமையுடன் செயல்படவும்.
ரோகிணி : செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.

மிதுனம் :

வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். வங்கி பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். எண்ணிய பணிகளை மன உறுதியுடன் செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் புதிய கருவிகள் வாங்குவது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வாகனம் மற்றும் கால்நடை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிஷம் : லாபம் அதிகரிக்கும்.
திருவாதிரை : முயற்சிகள் ஈடேறும்.
புனர்பூசம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

கடகம் :

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் மற்றும் செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். நெருக்கமானவர்களின் உதவிகளால் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் திருப்திகரமான சூழ்நிலைகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : தீர்வு கிடைக்கும்.
ஆயில்யம் : திருப்திகரமான நாள்.

சிம்மம் :

வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தநிலை குறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான சுறுசுறுப்பின்மை ஏற்பட்டு நீங்கும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பகைமையை தவிர்க்க இயலும். நண்பர்களின் உதவிகளால் மாற்றங்கள் உண்டாகும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல் காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
மகம் : மந்தநிலை குறையும்.
பூரம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
உத்திரம் : மேன்மையான நாள்.

கன்னி :

சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நிதானம் வேண்டும். தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் மன உளைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். தனம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
உத்திரம் : நிதானம் வேண்டும்.
அஸ்தம் : வாதங்களை தவிர்க்கவும்.
சித்திரை : புரிதல் உண்டாகும்.

துலாம் :

கணவன்-மனைவிக்கிடையே புரிதலும், அன்யோன்யமும் அதிகரிக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். அலுவலக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் மனதில் ஏற்படும். பயணம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : புரிதல்கள் ஏற்படும்.
சுவாதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
விசாகம் : கவனம் வேண்டும்.

விருச்சிகம் :

குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலைகள் காணப்படும். வியாபார ரீதியான முயற்சிகள் பலிதமாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விசாகம் : ஒற்றுமை மேம்படும்.
அனுஷம் : வரவுகள் அதிகரிக்கும்.
கேட்டை : பிரச்சனைகள் தீரும்.

தனுசு :

சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் ஏற்படும். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
மூலம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பூராடம் : பயணங்கள் சாதகமாகும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

மகரம் :

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். அரசு வழியில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். பணிபுரியும் இடத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்க முடியும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை
உத்திராடம் : தாமதங்கள் குறையும்.
திருவோணம் : சிந்தித்து செயல்படவும்.
அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

கும்பம் :

பெற்றோர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். பயணம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் புதிய கூட்டாளிகளை இணைப்பது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகத்தில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். பேச்சுக்களில் நிதானம் அவசியம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
சதயம் : இழுபறிகள் அகலும்.
பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.

மீனம் :

உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் ஈடேறும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான தருணங்கள் அமையும். புதிய நட்புகளின் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.
உத்திரட்டாதி : புதிய நட்பு கிடைக்கும்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930