இன்றைய தினப்பலன்கள் –

1 month ago
1478

மேஷம் :

எடுத்த காரியங்கள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தம்பதியர்களுக்கிடையே புரிதல் ஏற்படும். உத்தியோகத்தில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். திருப்பங்கள் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

⭐️அஸ்வினி : அலைச்சல்கள் ஏற்படும்.
⭐️பரணி : புரிதல் உண்டாகும்.
⭐️கிருத்திகை : சோர்வு நீங்கும்.

ரிஷபம் :

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். வாழ்க்கைத்துணைவர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வருமானத்தை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️கிருத்திகை : லாபம் மேம்படும்.
⭐️ரோகிணி : அறிமுகம் ஏற்படும்.
⭐️மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்

.

மிதுனம் :

உறவினர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை வெளிப்படும். நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு.

⭐️மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
⭐️திருவாதிரை : பிரச்சனைகள் உண்டாகும்.
⭐️புனர்பூசம் : மந்தத்தன்மை குறையும்.

கடகம் :

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் மேம்படும். வியாபாரிகளுக்கு புதிய கூட்டாளிகளை இணைப்பது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த அலைச்சல்கள் குறையும். மதிப்புகள் அதிகரிக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
⭐️பூசம் : லாபம் மேம்படும்.
⭐️ஆயில்யம் : அலைச்சல்கள் குறையும்.

சிம்மம் :

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோக பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். ஆதரவு கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை.

⭐️மகம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️உத்திரம் : நம்பிக்கை உண்டாகும்.

கன்னி :

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத உறவினர்களின் வருகையினால் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூர் தொடர்புகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். ஒத்துழைப்பு கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️உத்திரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
⭐️அஸ்தம் : முன்னேற்றமான நாள்.
⭐️சித்திரை : நெருக்கடிகள் உண்டாகும்.

துலாம் :

மற்றவர்களை சார்ந்து இருக்காமல் எந்தவொரு பணியையும் செய்து முடிப்பது நல்லது. வெளியிடங்களில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். பதற்றமின்றி செயல்பட வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.

⭐️சித்திரை : விவாதங்களை தவிர்க்கவும்.
⭐️சுவாதி : அனுபவம் உண்டாகும்.
⭐️விசாகம் : கவனம் வேண்டும்.

விருச்சிகம் :

தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். வாழ்க்கைத்துணைவரின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த விருப்பங்கள் நிறைவேறும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வெற்றிகரமான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️விசாகம் : நெருக்கடிகள் குறையும்.
⭐️அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️கேட்டை : சாதகமான பலன்கள் கிடைக்கும்.

தனுசு :

உறவினர்களின் வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் அகலும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். மகிழ்ச்சியான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️மூலம் : அனுகூலம் ஏற்படும்.
⭐️பூராடம் : இழுபறிகள் அகலும்.
⭐️உத்திராடம் : பொறுப்புகள் குறையும்.

மகரம் :

மனை தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். மனதில் உத்வேகமான சிந்தனைகள் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். இலக்கியம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உயர்வான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️உத்திராடம் : லாபம் மேம்படும்.
⭐️திருவோணம் : மந்தத்தன்மை குறையும்.
⭐️அவிட்டம் : ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம் :

குழந்தைகள் கல்வி தொடர்பான பணிகளில் சுறுசுறுப்பின்றி செயல்படுவார்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். ஊக்கத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️அவிட்டம் : செலவுகள் உண்டாகும்.
⭐️சதயம் : ஆதாயம் ஏற்படும்.
⭐️பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.

மீனம் :

குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் லாபகரமாக அமையும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். பயணங்களால் அனுபவம் உண்டாகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️பூரட்டாதி : சிறப்பான நாள்.
⭐️உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
⭐️ரேவதி : முயற்சிகள் ஈடேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930