30th July 2021
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (18.07.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (18.07.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

2 weeks ago
840
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (18.07.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

மனதிற்கு விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தவறிப்போன சில பொருட்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வீர்கள். ஒப்பந்தம் சார்ந்த பணிகளின் மூலம் லாபம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : நெருக்கம் அதிகரிக்கும்.
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம் :

மனதில் உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கண்பார்வைகளில் கவனம் வேண்டும். வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை குறைத்துக்கொள்வது நல்லது. சேவை தொடர்பான பணிகளில் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் சோர்வு ஏற்படும். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
ரோகிணி : அனுகூலமான நாள்.
மிருகசீரிஷம் : ஆர்வம் உண்டாகும்.

.

மிதுனம் :

செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புத்தகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். தூரதேசப் பயணங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். நேரத்திற்கு உணவு உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. செயல்களின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.
திருவாதிரை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
புனர்பூசம் : தாமதங்கள் குறையும்.

கடகம் :

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவரின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உண்மையானவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். கால்நடைகளின் மூலம் லாபம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.

சிம்மம் :

மக்கள் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். காதில் அணியும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் இருக்கக்கூடிய குழப்பங்கள் குறையும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரம் : மேன்மையான நாள்.
உத்திரம் : குழப்பங்கள் குறையும்.

கன்னி :

மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பத்திரம் தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் சிலருக்கு ஏற்படும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கணிப்பொறி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
அஸ்தம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சித்திரை : இழுபறிகள் குறையும்.

துலாம் :

செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். உடல் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். பழைய நினைவுகளின் மூலம் அமைதியின்மைக்கான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத விரய செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.
சுவாதி : சிந்தனைகள் மேம்படும்.
விசாகம் : அனுசரித்து செல்லவும்.

விருச்சிகம் :

உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : இடமாற்றங்கள் உண்டாகும்.
அனுஷம் : திருப்தியான நாள்.
கேட்டை : பிரச்சனைகள் குறையும்.

 

தனுசு :

செய்தொழிலில் மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆசைகள் நிறைவேறும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நெருக்கமான நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேளாண்மை சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். சமையல் தொடர்பான பணிகளில் லாபம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூராடம் : அனுகூலமான நாள்.
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.

மகரம் :

தொழில் சார்ந்த செயல்பாடுகளில் வாரிசுகளின் ஆதரவு கிடைக்கும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். முயற்சிக்கேற்ற பலன்கள் மற்றும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். பலதரப்பட்ட சிந்தனைகள் மற்றும் குழப்பங்களிலிருந்து விடுதலை பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
உத்திராடம் : ஆதரவான நாள்.
திருவோணம் : அங்கீகாரம் கிடைக்கும்.
அவிட்டம் : நெருக்கடிகள் குறையும்.

கும்பம் :

நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். மனைவியுடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சிலருக்கு கௌரவப் பதவிகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் மனத்தெளிவு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
சதயம் : ஆர்வம் உண்டாகும்.
பூரட்டாதி : தெளிவு பிறக்கும்.

மீனம் :

புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். கடன் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சகோதரர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அஞ்ஞான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.
உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
ரேவதி : குழப்பமான நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

July 2021
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031