23rd October 2021
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (26.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (26.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

4 months ago
523
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (26.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விவாதங்களின் மூலம் சாதுர்யமான பலன்கள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். வாகன மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மனதில் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அஸ்வினி : தன்னம்பிக்கையான நாள்.
பரணி : பிரச்சனைகள் குறையும்.
கிருத்திகை : துரிதம் உண்டாகும்.

ரிஷபம் :

திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்களும், மகிழ்ச்சியான தருணங்களும் உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் லாபம் பெறுவீர்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : எண்ணங்கள் நிறைவேறும்.
ரோகிணி : மாற்றங்கள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : லாபம் மேம்படும்.

.

மிதுனம் :

எதிலும் வேகமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் காலதாமதமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : காலதாமதம் உண்டாகும்.

கடகம் :

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திறமையான பேச்சுக்களின் மூலம் காரியசித்தி உண்டாகும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வது சேமிப்பிற்கு நன்மையளிக்கும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உள்ள உண்மையை அறிந்து முடிவுகளை எடுக்கவும். கால்நடைகள் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூசம் : சேமிப்புகள் மேம்படும்.
ஆயில்யம் : விழிப்புணர்வு வேண்டும்.

சிம்மம் :

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தாய்வழி உறவுகளிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூரம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
உத்திரம் : கவலைகள் நீங்கும்.

கன்னி :

தொழில் தொடர்பான முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்வியில் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி உற்சாகம் உண்டாகும். புதிய ஒப்பந்தம் சார்ந்த விஷயங்கள் சாதகமாக நிறைவேறும். எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். அரசு தொடர்பான உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திரம் : எண்ணங்கள் மேம்படும்.
அஸ்தம் : உற்சாகமான நாள்.
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.

துலாம் :

மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பெரியோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சுவாதி : திருப்தியான நாள்.
விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

விருச்சிகம் :

கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. சமூகப்பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது கவனத்துடன் செயல்படவும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். புதிய நபர்களிடம் குடும்ப விவகாரங்களை பகிர்வதை தவிர்க்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : லாபம் மேம்படும்.
கேட்டை : விவகாரங்களை தவிர்க்கவும்.

தனுசு :

சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். நெருக்கமானவர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். புதிய பொறுப்புகள் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மூலம் : ஆதரவு கிடைக்கும்.
பூராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.

மகரம் :

பிரிந்து சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். தடைபட்டு வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வாழ்க்கை பற்றிய கண்ணோட்டங்களின் மூலம் புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : இழுபறிகள் அகலும்.
திருவோணம் : புரிதல் மேம்படும்.
அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம் :

உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தனவரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : ஆதரவான நாள்.
சதயம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூரட்டாதி : சேமிப்புகள் அதிகரிக்கும்.

மீனம் :

வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். கூட்டாளிகளிடம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பாராத பயணங்களை மேற்கொள்ள நேரிடும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். புதிய வீடு மற்றும் மனை சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : தாமதங்கள் குறையும்.
உத்திரட்டாதி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
ரேவதி : செல்வாக்கு அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

October 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031