23rd October 2021

வரலாற்றில் இன்று – 20.06.2021 உலக தந்தையர் தினம்

4 months ago
234

அமெரிக்காவை சேர்ந்த சோனாரா ஸ்மார்ட் டோட்(Sonora Smart Dodd) என்ற பெண் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் என்பவருக்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்தார். இவர் பிறந்தவுடன் தாய் இறந்துவிட்டார். அதனால் இவரின் தந்தையே கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்தார்.

இதன் காரணமாக தாய்மார்களுக்கு ஒரு தினம் என்பது போல, தந்தையருக்கும் ஒரு தினம் தேவை என்ற எண்ணம் இவருக்கு ஏற்பட்டது. இவரது முயற்சியால் தந்தைக்கு மரியாதை செலுத்தும் வகையில் 1910ஆம் ஆண்டில் ஜூன் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை உலக தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.

சர்வதேச அகதிகள் தினம்

மதக்கலவரம், இனக்கலவரம், உள்நாட்டுப்போர், இயற்கைப் பேரழிவுகள் போன்ற காரணங்களால் தங்கள் நாட்டில் வாழ்வதற்கு வழி இல்லாமல் வெளியேறுபவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் 2000ஆம் ஆண்டிலிருந்து ஜூன் 20ஆம் தேதி உலக அகதிகள் தினமாக ஐ.நா.சபை அறிவித்தது.

விக்ரம் சேத்

இந்திய எழுத்தாளர் விக்ரம் சேத் 1952ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.

இவரது முதல் கவிதைத் தொகுப்பை மேப்பிங்ஸ் (Mappings) என்ற பெயரில் வெளியிட்டார். இவர் ‘ஃபிரம் ஹெவன் லேக்’,’தி கோல்டன் கேட்’,’எ சூட்டபிள் பாய்’ உள்ளிட்ட நாவல்கள்,’பீஸ்ட்லி டேல்ஸ்’,’தி ஃப்ராக் அண்ட் தி நைட்டிங்கேல்’ உள்ளிட்ட கவிதைகள், பயண நூல்கள் என பல துறைகளில் எழுதியுள்ளார்.

தாமஸ் குக் பயண நூல் விருது, காமன்வெல்த் கவிதை விருது (ஆசியா), சாகித்ய அகாடமி (ஆங்கிலம்), ஐரிஷ் டைம்ஸ் இன்டர்நேஷனல் ஃபிக்ஷன் பரிசு, பத்மஸ்ரீ போன்ற ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

முக்கிய நிகழ்வுகள்

2003ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி விக்கிமீடியா (wikimedia) அமைப்பு உருவானது.

1990ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி யுரெக்கா (5261 Eureka) என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

October 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031