வரலாற்றில் இன்று – 10.06.2021 எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன்

6 days ago
97

பிரபல வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் 1931ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார்.

இவர் தனது எட்டு வயதில், முதல் கச்சேரியை அரங்கேற்றினார். பல முன்னணி பாடகர்கள் அனைவருக்கும் வயலின் வாசித்துள்ளார். தனி வயலின் கச்சேரிகளை 50 ஆண்டுகாலம் நடத்தி வந்தார்.

இவர் பாரூர் – எம்எஸ்ஜி ஸ்டைல் என்ற புதிய பாணியை அறிமுகம் செய்தார். பத்ம பூஷண், பத்மஸ்ரீ, கலைமாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி, கேரள சங்கீத நாடக அகாடமி விருது, டி.சௌடையா விருது, வயலின் வாத்திய சாம்ராட், வயலின் வாத்திய சக்ரவர்த்தி, சப்தகிரி சங்கீத வித்வமணி போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

உலகம் முழுவதும் இசைக் கச்சேரிகளை நடத்தி இசைப் பிரியர்களால் ‘எம்எஸ்ஜி’ என பாசத்துடன் அழைக்கப்பட்ட எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் 2013ஆம் ஆண்டு மறைந்தார்.

வே.தில்லைநாயகம்

தமிழக நூலகத்துறையின் முன்னோடி வே.தில்லைநாயகம் 1925ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்தார்.

இவர் 1949ஆம் ஆண்டு அரசு உதவியுடன் நூலகப் பயிற்சி பெற்று, பொதுக்கல்வித்துறை இயக்க முதல் நூலகரானார்.

ஒரே துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக நூலகத்துறை இயக்குநராக பதவி வகித்து, தமிழக நூலக இயக்கத்தின் பொற்காலமாக மாற்றிய இவர் 1982ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இவர் எழுதிய ‘இந்திய நூலக இயக்கம்’ என்ற நூலுக்காக உலக பல்கலைக்கழகம் 1982ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

தமிழில் ‘வேதியம் 1008’ உட்பட சில நூல்களை எழுதியுள்ளார். இவரது பல நூல்கள் தமிழக அரசின் முதல் பரிசை பெற்றவை.

தமிழக பொது நூலக இயக்கத்தின் தந்தை வே.தில்லைநாயகம் 2013ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

2003ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி (Spirit (rover)) செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

June 2021
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930