• ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (10.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (10.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

6 days ago
210
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (10.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

செய்யும் முயற்சிகளுக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். நீண்ட நாட்களாக இருந்துவந்த செயல்களில் தடை, தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : முன்னேற்றமான நாள்.
பரணி : தாமதங்கள் நீங்கும்.
கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும்.

ரிஷபம் :

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : புரிதல் உண்டாகும்.
ரோகிணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

.

மிதுனம் :

உடல் ஆரோக்கியம் மற்றும் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். உடனிருப்பவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைத்து மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : ஆரோக்கியம் மேம்படும்.
திருவாதிரை : வாய்ப்புகள் ஏற்படும்.
புனர்பூசம் : மனம் மகிழ்வீர்கள்.

கடகம் :

அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். புதுவிதமான இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : இழுபறிகள் குறையும்.
பூசம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : ஆர்வம் உண்டாகும்.

சிம்மம் :

குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆதரவு கிடைக்கும். வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகமும், ஒப்பந்தங்களும் சாதகமாகும். மருத்துவம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : அறிமுகம் உண்டாகும்.
உத்திரம் : இன்னல்கள் குறையும்.

கன்னி :

தந்தை வழி உறவினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகள் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் அமைதியின்மையும், போராட்டமும் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.
அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.
சித்திரை : தாமதங்கள் குறையும்.

துலாம் :

தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். சிந்தனையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணைவருடன் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பார்த்த சில நிகழ்வுகள் காலதாமதமாக நிறைவேறும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.
விசாகம் : காலதாமதம் உண்டாகும்.

விருச்சிகம் :

நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும்போது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
விசாகம் : ஆதரவான நாள்.
அனுஷம் : அறிமுகம் ஏற்படும்.
கேட்டை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

தனுசு :

மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களின் உண்மை நிலையை ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது. தவறிய சில பொருட்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
மூலம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூராடம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

மகரம் :

எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் செய்யும் மாற்றங்களுக்கு பாராட்டுகளும், ஆதரவும் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : நெருக்கடிகள் குறையும்.
திருவோணம் : பாராட்டுகள் கிடைக்கும்.
அவிட்டம் : ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம் :

உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபாரம் தொடர்பான பணிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உண்டாகும். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
சதயம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.

மீனம் :

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வேலையாட்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : குழப்பங்கள் குறையும்.
ரேவதி : தீர்வு கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

June 2021
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930