• ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (06.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (06.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

6 months ago
254
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (06.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த விஷயங்களை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பிள்ளைகளுடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். தடைபட்ட தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் மாற்றமான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அஸ்வினி : இழுபறிகள் குறையும்.
பரணி : எண்ணங்கள் ஈடேறும்.
கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

ரிஷபம் :

மனதில் நினைத்த காரியங்களை தன்னம்பிக்கையுடன் செய்து முடிக்க வேண்டும். செய்யும் முயற்சிகளில் அலைச்சலுக்கு பின்பே சாதகமான முடிவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் கூட்டாளிகளின் ஆதரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : தன்னம்பிக்கை வேண்டும்.
ரோகிணி : அறிமுகம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : ஆதரவு அதிகரிக்கும்.

.

மிதுனம் :

எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். குடும்ப பெரியவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். குழந்தைகளின் கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் சார்ந்த பணிகளில் உடனிருப்பவர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், அதிகாரங்களும் அதிகரிக்கும். பயணங்களின் தன்மைகளை அறிந்து மேற்கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : தனவரவுகள் கிடைக்கும்.
திருவாதிரை : முன்னேற்றமான நாள்.
புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

கடகம் :

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றங்கள் சிலருக்கு உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஈர்ப்பு ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த பழைய கடன் தொடர்பான தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தொழில் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நுணுக்கமான விஷயங்களில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : ஈர்ப்பு ஏற்படும்.
ஆயில்யம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

சிம்மம் :

தந்தை வழி உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்கள் தொடர்பான வழிகளில் லாபம் உண்டாகும். வியாபார ரீதியான முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறைவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : லாபம் உண்டாகும்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.

கன்னி :

செயல்பாடுகளில் கவனமின்மை ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். இளைய சகோதரர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பான புதிய முதலீடுகளில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : ஆலோசனைகள் வேண்டும்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.

துலாம் :

தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில உதவிகள் மற்றும் தனவரவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் தனவரவுகள் மேம்படும். போட்டிகளில் பங்கேற்று மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : நெருக்கம் அதிகரிக்கும்.
சுவாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
விசாகம் : தனவரவுகள் மேம்படும்.

விருச்சிகம் :

உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கோப உணர்வுகளை குறைத்துக்கொண்டு சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. உணவு தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : ஒத்துழைப்பு மேம்படும்.
அனுஷம் : புரிதல் உண்டாகும்.
கேட்டை : விழிப்புணர்வு வேண்டும்.

தனுசு :

சுபகாரியங்கள் தொடர்பான விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : சிந்தித்து செயல்படவும்.
பூராடம் : அனுபவம் உண்டாகும்.
உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.

மகரம் :

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். புத்துணர்ச்சியுடன் புதிய காரியங்களில் செயல்படுவீர்கள். எண்ணிய எண்ணங்களை செயல்வடிவமாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : லாபம் மேம்படும்.
அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.

கும்பம் :

வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். அரசு தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக கிடைக்கும். சிறு வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு வாக்குவாதங்களின் மூலம் அமைதியின்மை ஏற்படும். மனை விருத்திக்கான எண்ணங்களும், அதற்கான முயற்சிகளும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : உதவிகள் கிடைக்கும்.
பூரட்டாதி : முயற்சிகள் அதிகரிக்கும்.

மீனம் :

பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை ஏற்படும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
ரேவதி : பாராட்டுகள் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930