வரலாற்றில் இன்று – 03.06.2021 கலைஞர் மு.கருணாநிதி

4 months ago
147

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான டாக்டர் மு.கருணாநிதி 1924ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்ற கிராமத்தில் பிறந்தார்.

இவர் சிறுவயதிலேயிருந்தே தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ் திரையுலகில் திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதுவதை தவிர, பல்வேறு கவிதைகள், புத்தகங்கள், வரலாற்று நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் போன்றவற்றையும் எழுதியிருக்கிறார்.

‘தூக்குமேடை’ நாடகத்தின் போது எம்.ஆர்.ராதா, இவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். பின்பு அதுவே நிலைத்து விட்டது. இவர் திரைக்கதை எழுதிய பராசக்தி, மனோகரா, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி போன்ற படங்கள் மிகவும் பிரபலம் பெற்றது.

இவர் தன்னுடைய 14வது வயதில் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபட்டார். தமிழகத்தின் முதல்வராக இவர் ஐந்துமுறை பதவி வகித்துள்ளார்.

மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான இவர் 2018ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1657ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்து கூறிய இங்கிலாந்து மருத்துவர் வில்லியம் ஹார்வி மறைந்தார்.

1889ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி முதன்முதலில் மின்சாரம் அதிக தூரம் (அமெரிக்காவின் வில்லாமிட்டி அருவியில் இருந்து 23 கி.மீ. தூரத்தில் உள்ள ஓரகன் என்னுமிடத்தில் போர்ட்லாண்ட் பகுதிக்கு) எடுத்துச் செல்லப்பட்டது.

2009ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி தமிழறிஞரான இரா. திருமுருகன் மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930