வடசென்னை காவல்துறை துணை ஆணையர் திருமதி.சுப்புலட்சுமி இடமாற்றம்

6 months ago
188

வடசென்னை காவல்துறை துணை ஆணையர் திருமதி.சுப்புலட்சுமி அவர்கள் சமூக அக்கறை கொண்ட
நேர்மையான அதிகாரி. இந்த கொரானா காலத்தில் பல நல்ல பணிகளை மக்களுக்கு செய்தவர். அவரின் வண்டி சாலையைக் கடக்கும் போதே ஒரு பக்கம் மாஸ்க்கை விநியோகித்து மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவார்.

ஒரு விழாவில் அவரை சந்திக்க நேர்ந்த போது அவரின் நேர்மையான பேச்சும் செய்கையும் எனை வெகுவாய் கவர்ந்தது. ராயபுரம் ரவுண்ட்அப் குழுவின் சார்பாக கொரானா தடூப்பூசி போடும் பணி துவங்கத்தில் அவர்அவ்விழாவில் தலைமையாய் கலந்து கொண்டதோடு, அவருக்கு பொன்னாடைகள் போர்த்த வரும்போது கூட விழா ஏற்பாட்டாளர்களிடம் இந்த பொன்னாடைகள் எங்களுக்கு பரிசுகள் இதையெல்லாம் தருவதைக் காட்டிலும், இப்போதைக்கு தேவைப்படும் மாஸ்க் மற்றும் சானிடைஸைர்களைத் தந்தால் நான் செல்லும் இடங்களில் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்க வேண்டி வரும் அவர்களுக்கு வழங்கலாம் என்ற அவரின் பேச்சில் மக்களின் மேலுள்ள அக்கறை தெரிந்தது. எண்ணற்ற சமூகப்பணிகளை செய்திருக்கிறார். மிகப்பெரிய அதிகாரியாக இருந்தாலும் மக்களோடு மக்களாக கலந்து அவர்களின் எண்ணங்களை பிரதிபலித்து பாதுகாப்பான முறையில் அவர்களை வழிநடத்திச் சென்றிருக்கார்.

அன்னார் மாற்றப்பட்டது பின்தங்கிய பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் நம்மைப் போன்ற சமூக ஆர்வலர்களுக்கும் சற்றே வருத்தம் தரக்கூடிய செய்திதான். இதுபோன்ற சமூக அக்கறை கொண்ட அதிகாரிகள் எங்கு சென்றாலும் குன்றிலிட்ட விளக்காக ஒளிர்வார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

வருத்தங்களும் வாழ்த்துக்களும் மேடம்

லதாசரவணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930