30th July 2021
  • ராசிபலன்
  • வார ராசிபலன்கள் (10.05.2021 – 16.05.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

வார ராசிபலன்கள் (10.05.2021 – 16.05.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

3 months ago
2234
  • ராசிபலன்
  • வார ராசிபலன்கள் (10.05.2021 – 16.05.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

மேஷ ராசி அன்பர்களே இந்த வாரம் புதிய முயற்சிகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். இழுபறியாக இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் அதிகரிக்கும். மனதில் அவ்வப்போது சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும்.
வழிபாடு :
முருகப்பெருமானை வழிபாடு செய்துவர மனக்கஷ்டங்கள் குறையும்.

ரிஷபம் :

ரிஷப ராசி அன்பர்களே இந்த வாரம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது பல விஷயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் புரிதலையும், நுட்பங்களையும் அறிந்து கொள்வீர்கள். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.
வழிபாடு :
விஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவர பணப்பிரச்சனைகள் தீரும்.

மிதுனம் :

மிதுன ராசி அன்பர்களே இந்த வாரம் தனவரவுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். இளைய உடன்பிறப்புகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் வாகனங்களை மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் சிலருக்கு ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மீதான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.
வழிபாடு :
பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபாடு செய்துவர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

கடகம் :

கடக ராசி அன்பர்களே இந்த வாரம் மனதில் நினைத்த காரியங்களை நினைத்து விதத்தில் செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். தொழில் தொடர்பான புதிய முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். மனையில் வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.
வழிபாடு :
விநாயகப்பெருமானை வழிபாடு செய்துவர மனதில் இருந்துவந்த குழப்பங்கள் அகலும்.

சிம்மம் :

சிம்ம ராசி அன்பர்களே இந்த வாரம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மனதில் அவ்வப்போது இனம்புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத்துணைவரின் ஒத்துழைப்பு மற்றும் உதவிகள் திருப்தியை அளிக்கும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.
வழிபாடு :
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர தடைகள் விலகும்.

கன்னி :

கன்னி ராசி அன்பர்களே இந்த வாரம் பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாகனம் தொடர்பான கடன் உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். அரசாங்கம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான நிலைகள் நீங்கி சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
வழிபாடு :
புதன்கிழமைகளில் பெருமாளை வழிபாடு செய்துவர வியாபாரம் தொடர்பான இன்னல்கள் குறையும்.

துலாம் :

துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் மனதில் புதுவிதமான சிந்தனைகளும், ஆசைகளும் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான சூழ்நிலைகளும், வாய்ப்புகளும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சிறு மற்றும் குறுந்தொழில் வியாபாரிகளுக்கு எதிர்பாராத மாற்றங்களும், வாய்ப்புகளும் உண்டாகும்.
வழிபாடு :
குலதெய்வத்தை வழிபாடு செய்துவர மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி அன்பர்களே இந்த வாரம் மனதில் பலதரப்பட்ட எண்ணங்களின் மூலம் குழப்பமும், கேள்விகளும் அதிகரிக்கும். எதையும் பொறுமையுடன் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. அவசரமின்றி விவேகத்துடன் செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உணவு தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
வழிபாடு :
செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும்.

தனுசு :

தனுசு ராசி அன்பர்களே இந்த வாரம் புதிய முயற்சிகள் மற்றும் சிந்தனைகள் மேம்படும். திட்டமிட்ட சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். குழந்தைகளின் வழியில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். சிலருக்கு புதிய வீடு வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். கல்வி தொடர்பான பணிகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.
வழிபாடு :
வியாழக்கிழமைகளில் குருபகவானை வழிபாடு செய்துவர நன்மைகளும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

மகரம் :

மகர ராசி அன்பர்களே இந்த வாரம் மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்த்து கொள்வது நல்லது. எதிர்பாராத பயணங்கள் மற்றும் உத்தியோகம் தொடர்பான இடமாற்றங்கள் சிலருக்கு ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மறைமுகமாக இருக்கக்கூடிய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகளும், வாய்ப்புகளும் உண்டாகும்.
வழிபாடு :
பைரவரை வழிபாடு செய்துவர எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்து குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

கும்பம் :

கும்ப ராசி அன்பர்களே இந்த வாரம் மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். உறவினர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையும், ஒத்துழைப்பும் மேம்படும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் திறமைக்கேற்ப உதவிகளும், வாய்ப்புகளும் சாதகமாக அமையும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். மனதில் சேமிப்பை அதிகப்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் சிலருக்கு மேம்படும்.
வழிபாடு :
மாரியம்மனை வழிபாடு செய்துவர எதிர்ப்புகள் விலகும் மற்றும் காரிய வெற்றி உண்டாகும்.

மீனம் :

மீன ராசி அன்பர்களே இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் படிப்படியாக குறையும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற கருத்துக்கள் மற்றும் மற்றவர்களை பற்றிய கருத்துக்களை கூறுவதை தவிர்ப்பது உங்களின் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.
வழிபாடு :
நரசிம்மரை வழிபாடு செய்துவர நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

July 2021
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031