வரலாற்றில் இன்று – 10.05.2021 உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம்

4 months ago
216

உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம் ஆண்டுதோறும் மே 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பல்லுறுப்பு நோயால் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பல்லுறுப்பு நோயானது தோல் மட்டுமில்லாமல் சிறுநீரகம், மூளை, இதயம், நுரையீரல், கண்கள் போன்ற உள்ளுறுப்புகளையும், எலும்புகளையும் தாக்குகிறது.

தேவையில்லாத சில மருந்துகளை உட்கொள்ளுதல், கிருமித்தொற்று, உணவுப்பழக்கம் போன்ற காரணங்களாலும், மரபு ரீதியாகவும் இந்த நோய் ஏற்படுகிறது.

ஆண்களைவிட பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்பத்திலேயே நோயை கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால், அதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்.

தீராத காய்ச்சல், அதிகமாக முடி உதிர்தல், வாய்ப்புண், சோர்வு நிலை, ரத்த சோகை, தோலில் புதிய சிவப்பு நிற தடிப்புகள் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

நயந்தரா சாகல்

சாகித்திய அகாடமி போர்டில் (ஆங்கிலம்) அறிவுரையாளராகப் பணிபுரிந்த இந்திய எழுத்தாளர் நயந்தரா சாகல் 1927ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தார்.

இவர் நேருவின் தங்கையான விசயலக்குமி பண்டிட்டின் மகள் ஆவார். இலக்கியத்திற்கான சாகித்திய அகாடமி விருது (ஆங்கிலம்) 1986ஆம் ஆண்டில் Rich Like Us (1985) என்ற இவரது ஆங்கிலப் புதினத்திற்கு வழங்கப்பட்டது.

மேலும், இவர் ஐ.நா. பொதுக் குழுவுக்கு அனுப்பப்பட்ட இந்தியத் தூதுக் குழுவிலும், மனித உரிமைகள் அமைப்பில் உதவித் தலைவராகவும் பணியாற்றினார்.

முக்கிய நிகழ்வுகள்

1857ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி இந்தியாவில் மீரட் என்ற இடத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான சிப்பாய் கிளர்ச்சி ஆரம்பமானது.

1994ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின தலைவரானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930