நகைச்சுவைச் சிறுகதை போட்டி – முடிவு

7 months ago
442

இந்தப் படத்திற்குப் பொருத்தமான நகைச்சுவைச் சிறுகதை எழுதச் சொல்லி ‘மின் கைத்தடி’ தளத்தின் சார்பில் ஒரு போட்டி அறிவித்திருந்தோம்.

நகைச்சுவை என்பதாலேயா, இல்லை படம் எழுதுவதற்கு சவாலைக் கொடுத்ததா என்பதாலேயோ, எதிர்பார்த்ததைவிடக் குறைவான கதைகளே வந்திருந்தன. (நான் எதிர்பார்த்தபடி பெண்களில் பெரும்பான்மையும் கிடைக்கவில்லை.)

எனவே அறுதிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத தேர்தல் முடிவினைப் போல, போட்டியின் முடிவும் எதிர்பாராததாகவே வந்திருக்கிறது. போட்டிக்கு வந்த கதைகளைப் படித்து, பரிசீலித்துத் தந்த நடுவர் நந்து சுந்து அவர்களுக்கு மனம் நிறை நன்றி.

இனி, முடிவுகள்…

முதல் பரிசு –

‘குமரேஷ் எல்கேஜியைக் காணவில்லை’

– முகில் தினகரன்.

இரண்டாம் பரிசு –

‘சீனி’வாசன்

– பரிவை சே.குமார்.

மூன்றாம் பரிசு –

‘கண்காட்சிப் பிழை’

– சாய்ரேணு.

பரிசுகளை வென்றவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். மற்றையோர் இனிவரவிருக்கும் எளிய போட்டிகளில் வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துகள்.

பரிசு பெற்றவர்களுக்கு விரைவில் பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்.

பாலகணேஷ்

மின்கைத்தடி.காம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930