7 செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவுக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை ஓராண்டு சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. நடிகர் சரத்குமார், ராதிகா ஆகியோர் பங்கு தாரர்களாக இருக்கக்கூடிய மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு மற்றும் கீர்த்தி சுரேஷ்  ஆகியோரை வைத்து இது என்ன மாயம் என்ற திரைப்படத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக 1.5 கோடி ரூபாய் கடனை ரேடியண்ட் மீடியா என்ற நிறுவனத்திடம் பெற்றிருந்தது.இந்த பணத்தை 2015ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் திருப்பி தந்துவிடுவதாகவும், பணத்தை கொடுத்த பிறகுதான் படத்தை வெளியிடுவோம் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், உத்தரவாதம் அளித்தப்படி பணத்தை திருப்பி கொடுக்காமல் பாம்பு சட்டை என்ற மற்றொரு படத்தை நடிகர் சரத்குமார், ராதிகாவும் தயாரித்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இதற்காக அவர்கள் கொடுத்த 7 செக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டன. இதனையடுத்து, நடிகர் சரத்குமார், ராதிகா மற்றும் ஸ்டீபன் மீது வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்திருந்த நிலையில் நேரில் ஆஜராகினர். …

இந்நிலையில், சென்னை எம்.பி. எம்.எல்ஏ. மீதான விசாரிக்கக்கூடிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், 7 செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா, ஸ்டீபனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது…

Leave a Reply

Your email address will not be published.