• ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (21.03.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (21.03.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

4 weeks ago
62
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (21.03.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். ஒப்பந்தம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : மேன்மை உண்டாகும்.

ரிஷபம் :

வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். தொழில் தொடர்பான பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். அந்நியர்களின் உதவிகளால் பொருட்சேர்க்கை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : பிரச்சனைகள் நீங்கும்.
ரோகிணி : எண்ணங்கள் மேம்படும்.
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.

மிதுனம் :

நெருக்கமானவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிஷம் : எண்ணங்களை அறிவீர்கள்.
திருவாதிரை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
புனர்பூசம் : புகழ் உண்டாகும்.

கடகம் :

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுயதொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : குழப்பங்கள் நீங்கும்.
பூசம் : அனுகூலமான நாள்.
ஆயில்யம் : புரிதல் மேம்படும்.

சிம்மம் :

கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனவரவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பதவி உயர்வால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : லாபம் மேம்படும்.
பூரம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : மனக்கவலைகள் குறையும்.

கன்னி :

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கடித போக்குவரத்தால் சாதகமான செய்திகள் கிடைக்கும். வர்த்தகம் புரிதலில் எச்சரிக்கையுடன் இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் நிதானமாக செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சித்திரை : நிதானமாக செயல்படவும்.

துலாம் :

தந்தை மற்றும் உறவுகளுக்கிடையே அனுசரித்து செல்லவும். வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் கீர்த்தி உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : கலகலப்பான நாள்.
விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம் :

உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். உடனிருப்பவர்களின் மூலம் விரயங்கள் ஏற்படும். கூட்டாளிகளிடம் பொறுமையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : நிதானம் தேவை.
கேட்டை : விரயங்கள் ஏற்படும்.

தனுசு :

நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் செல்வாக்கு உயரும். நெருங்கிய நண்பர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். நீண்ட நாள் நண்பர்களுடன் கூடி பேசி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மூலம் : செல்வாக்கு உயரும்.
பூராடம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

மகரம் :

தாய்வழி உறவுகளால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். வாகனப் பயணங்களின் மூலம் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
திருவோணம் : ஒற்றுமை மேம்படும்.
அவிட்டம் : மேன்மையான நாள்.

கும்பம் :

போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி பெறுவீர்கள். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உயர் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் வேலைவாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.

மீனம் :

சாதுர்யமான பேச்சுக்களால் பாராட்டப்படுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தூரதேச பயணங்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
பூரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.
ரேவதி : ஆதரவான நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

April 2021
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930