செய்திதுளிகள்

10 months ago
251

செய்தித்துளிகள்!:
தமிழகத்தில் 2,098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூன் 26, 27ல் போட்டித் தேர்வு.

தேர்வில் பங்கேற்க மார்ச் 1 முதல் 25ம் தேதி வரை தகுதியானவர்கள் ஆன்லைனில் http://trb.tn.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

-ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் தகுதியான 31 விரிவுரையாளர்கள், அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கு மாற்றம்.

கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் கல்லூரிக் கல்வி இயக்ககம் நடவடிக்கை.

மொழிவாரி சிறுபான்மையினர் நலனுக்காக “தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்” என்ற நிறுவனத்தை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விதிமுறைகளை மீறியதாக BBC ஒளிபரப்புக்கு தடை விதித்து சீன அரசு நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றை சீனா கையாண்ட விதம், ஜிங்ஜியாங் பிரச்னை குறித்து தவறான செய்திகளை BBC, ஒளிபரப்பியதாக சீனா அரசு குற்றம்சாட்டி, அதற்கு தடை விதிக்க இருப்பதாக சீன மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.

கலப்பு திருமணம் செய்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முக்கியமான அரசாணை

பெற்றோர் விருப்பத்தின் அடிப்படையில் ஜாதிச் சான்றிதழ் வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவு.

✍ #BREAKING

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்.

12ம் வகுப்பு செய்முறை தேர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை – அமைச்சர் செங்கோட்டையன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930