வார ராசிபலன்கள் (25.01.2021 – 31.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 வார ராசிபலன்கள் (25.01.2021 – 31.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளின் மூலம் சேமிப்புகளும், உத்தியோக உயர்வுகளும் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளிடம் சற்று பொறுமையுடன் நடந்து கொள்வது நன்மையளிக்கும். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், அதற்கான ஆலோசனைகளும் கிடைக்கும்.

வழிபாடு :
புதன்கிழமைதோறும் நரசிம்மரை வழிபாடு செய்துவர உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.

ரிஷபம் :

வாக்கு சாதுர்யத்தின் மூலம் தொழில் சார்ந்த ஆதாயம் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். மாணவர்களுக்கு வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவமும், அறிவும் கிடைக்கும்.

வழிபாடு :
ஞாயிற்றுக்கிழமைதோறும் சூரிய வழிபாடுகளை செய்துவர எதிர்பார்த்த உதவிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம் :

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த இழுபறியான சூழல் நீங்கி சுபிட்சம் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்ப்பது நல்லது.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் பெருமாளை வழிபட மனதில் இருந்துவந்த எண்ணங்கள் ஈடேறும்.

கடகம் :

புதிய நபர்களின் மூலம் எதிர்பாராத சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.

வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமி வழிபாடு செய்துவர ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

சிம்மம் :

முக்கியமான முடிவுகள் எடுக்கும் பொழுது தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுப்பது நன்மையளிக்கும். உடல் நிலையில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.

வழிபாடு :
ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானை வழிபட நன்மைகள் நடைபெறும்.

கன்னி :

மனதில் இருக்கும் எண்ணங்களை நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் தெளிவு கிடைக்கும். தனம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கையாளுவதன் மூலம் இலாபம் அதிகரிக்கும்.

வழிபாடு :
நரசிம்மரை வழிபட நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

துலாம் :

செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்களை அறிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்பட்டு காரியவெற்றி அடைவீர்கள். நண்பர்களின் மூலம் ஒத்துழைப்பும், மகிழ்ச்சியான செய்திகளும் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதற்கேற்ற பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும்.

வழிபாடு :
திங்கட்கிழமைதோறும் வராகி அம்மனை வழிபாடு செய்துவர தொழில் தொடர்பான முயற்சிகள் ஈடேறும்.

விருச்சிகம் :

நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பதன் மூலம் பிரிவுகளும், பகையும் குறையும். வாகனப் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மாணவர்கள் புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும்.

வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் குருவை வழிபாடு செய்துவர சுபகாரியங்கள் நடைபெறும்.

தனுசு :

பணி செய்யும் இடங்களில் பொறுப்புகளும், செயல்பாடுகளும் அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பேச்சுக்களில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் முன்னேற்றத்தினை ஏற்படுத்தும். மனை விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகளும், இலாபமும் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து சாதகமாக செயல்படுவீர்கள்.

வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் ராகவேந்திரரை வழிபாடு செய்துவர கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும்.

மகரம் :
சிறுதொழில் செய்வதற்கான எண்ணங்கள் மேம்படும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்களும், நெருக்கங்களும் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் காணப்படும். தொழில் தொடர்பான வெளியூர் அல்லது வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். மாணவர்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்துவர எண்ணத் தெளிவும், புத்துணர்ச்சியும் பெறுவீர்கள்.

கும்பம் :

மனதிற்கு பிடித்த புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வாரிசுகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை மாறுபடும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பங்களும், இடையூறுகளும் நீங்கி தெளிவு கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளிலும், பாசன வசதிகளிலும் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும்.

வழிபாடு :

சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்துவர சுபகாரியங்கள் தொடர்பான செயல்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும்.

மீனம் :

தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவும், உதவிகளும் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சிறு சிறு காலதாமதங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு சாதகமாக அமையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வேலையாட்களுடன் அனுசரித்து செல்வது நல்லது

வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்கள் நீங்கும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published.