இன்றைய தினப்பலன்கள் (24.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (24.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்கள் இலாபகரமாக அமையும். புதிய நபர்களின் அறிமுகமும், நட்பும் உண்டாகும். மனை வாங்கும் முயற்சிகள் கைகூடும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். நீர்நிலை தொழிலில் இருப்பவர்களுக்கு தனவரவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அஸ்வினி : இலாபகரமான நாள்.
பரணி : முயற்சிகள் கைகூடும்.
கிருத்திகை : தனவரவுகள் அதிகரிக்கும்.

ரிஷபம் :

செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். அக்கம்-பக்கத்து வீட்டார்களின் ஆதரவு கிடைக்கும். புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும்.
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : உற்சாகமான நாள்.

மிதுனம் :

பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். பிரிந்து சென்றவர்கள் நெருங்கி வருவார்கள். மறைமுக போட்டிகள் விலகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.
திருவாதிரை : பயணங்கள் சாதகமாகும்.
புனர்பூசம் : போட்டிகள் விலகும்.

கடகம் :

சமூக பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். எடுக்கும் புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்து சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : புகழ் உண்டாகும்.
பூசம் : முன்னேற்றமான நாள்.
ஆயில்யம் : தெளிவு கிடைக்கும்.

சிம்மம் :

நீண்ட நாட்களாக மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் தொடர்பான முதலீடுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : ஆசைகள் நிறைவேறும்.
பூரம் : மாற்றங்கள் உண்டாகும்.
உத்திரம் : காலதாமதம் ஏற்படும்.

கன்னி :

எந்த செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளிவட்டார நபர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான சூழல்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
உத்திரம் : உற்சாகமான நாள்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

துலாம் :

நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும். மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் தேவை. எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்களில் காலதாமதம் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : நிதானம் வேண்டும்.
சுவாதி : கவனம் தேவை.
விசாகம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம் :

குடும்பத்தில் உங்களின் மீதான மதிப்பும், மரியாதையும் உயரும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான சூழல்கள் உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த குழப்பங்கள் மறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : மரியாதை உயரும்.
அனுஷம் : நட்பு கிடைக்கும்.
கேட்டை : குழப்பங்கள் மறையும்.

தனுசு :

மாமன்வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். சில செயல்களை பக்குவமாக பேசி செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மனைவிவழி உறவுகளின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மூலம் : மனக்கசப்புகள் குறையும்.
பூராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திராடம் : ஆதரவான நாள்.

மகரம் :

புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளால் அனுகூலம் உண்டாகும். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : எண்ணங்கள் நிறைவேறும்.
திருவோணம் : அனுகூலம் உண்டாகும்.
அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.

கும்பம் :

மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு வீடு அல்லது உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : விருப்பங்கள் நிறைவேறும்.
சதயம் : சிந்தனைகள் மேலோங்கும்.
பூரட்டாதி : காலதாமதம் ஏற்படும்.

மீனம் :

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். பாகப்பிரிவினைகள் சாதகமாக முடியும். மனதில் எதையும் சமாளிக்கும் திறமையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
ரேவதி : இலாபம் உண்டாகும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published.