• ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (13.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (13.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

1 week ago
24
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (13.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

தொழில் சம்பந்தமான முக்கிய மாற்றங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான சூழல் ஏற்படும். நண்பர்களின் ஆதரவால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். புதிய முதலீடுகளில் சற்று சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அஸ்வினி : மாற்றங்கள் உண்டாகும்.
பரணி : முன்னேற்றமான நாள்.
கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.

ரிஷபம் :

தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உறவினர்களின் வருகையால் ஆதரவான சூழல் உண்டாகும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் தோன்றும் ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ரோகிணி : ஆதரவான நாள்.
மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

மிதுனம் :

மற்றவர்களை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். செய்யும் செயல்களின் பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் கனிவுடன் நடக்கவும். மனதில் தெளிவற்ற எண்ணங்களால் செயல்களில் காலதாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
திருவாதிரை : கனிவு வேண்டும்.
புனர்பூசம் : காலதாமதம் உண்டாகும்.

கடகம் :

கூட்டாளிகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். எதிர்பாலின மக்களால் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் தனவரவுகள் மேம்படும். திருமணம் சம்பந்தமான சுபச்செயல்கள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : மனக்கசப்புகள் குறையும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : தனவரவுகள் மேம்படும்.

சிம்மம் :

உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் சோர்வு உண்டாகும். கலைஞர்களுக்கு திறமைகளை மேம்படுத்துவதற்கான சூழல் அமையும். சிறு அலைச்சலுக்கு பின்பு உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரம் : சோர்வு உண்டாகும்.
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.

கன்னி :

ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். நெருங்கிய உறவினர்களிடம் கவனத்துடன் பேசவும். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். பயணங்களில் நிதானம் வேண்டும். ஆடைச்சேர்க்கை உண்டாகும். மனை சார்ந்த செயல்பாடுகளில் இலாபம் ஏற்படும். உறவினர்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : எண்ணங்கள் மேலோங்கும்.
அஸ்தம் : இலாபம் உண்டாகும்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம் :

பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். வாகனப் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான சூழல் உண்டாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.
விசாகம் : திருப்தியான நாள்.

விருச்சிகம் :

நினைத்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். பணி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ள மறைமுக எதிர்ப்புகள் குறையும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.
அனுஷம் : இழுபறிகள் நீங்கும்.
கேட்டை : எதிர்ப்புகள் குறையும்.

தனுசு :

வர்த்தகத்தில் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். பயணங்களால் இலாபம் உண்டாகும். தலைமை அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
பூராடம் : ஆதரவான நாள்.
உத்திராடம் : ஆசிகள் கிடைக்கும்.

மகரம் :

தொழிலை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்களை குறைப்பதால் சாதகமான செயல்கள் நடைபெறும். வெளியூர் பயணங்களில் சில இடையூறுகள் தோன்றி மறையும். அரசு பணிகளில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
திருவோணம் : சாதகமான நாள்.
அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.

கும்பம் :

பணியில் இருந்துவந்த இடர்பாடுகள் குறையும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். சுபச்செய்திகளால் மகிழ்ச்சியும், அலைச்சலும் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : இடர்பாடுகள் குறையும்.
சதயம் : ஒற்றுமை மேலோங்கும்.
பூரட்டாதி : தனவரவுகள் கிடைக்கும்.

மீனம் :

வியாபாரத்தில் புதிய நபர்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். எண்ணிய பணிகளை முடிப்பதற்கு சிறு அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : இலாபகரமான நாள்.
உத்திரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
ரேவதி : மகிழ்ச்சியான நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031