• ராசிபலன்
  • வார ராசிபலன்கள் (11.01.2021 – 17.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

வார ராசிபலன்கள் (11.01.2021 – 17.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

2 weeks ago
45
  • ராசிபலன்
  • வார ராசிபலன்கள் (11.01.2021 – 17.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி மேன்மை உQண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான பொறுப்புகள் கிடைக்கும். வீடு வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்து வர குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம் :

ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வு வேண்டும். எண்ணங்களில் சோர்வும், செயல்பாடுகளில் காலதாமதமும் நேரிடும். வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவரின் மூலம் ஆதாயம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

வழிபாடு :
தினந்தோறும் விநாயகரை வழிபாடு செய்து வர எண்ணத்தெளிவு உண்டாகும்.

மிதுனம் :

கணவன், மனைவிக்கிடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடன் தொடர்பான பிரச்சனைகளால் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். எதிர்பாலின மக்களின் மூலம் ஆதாயமான பலன்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு வெளியூர் பயணங்கள் சாதகமாகும். மாணவர்கள் கல்வி தொடர்பான பணிகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் ராகவேந்திரரை வழிபாடு செய்து வர தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

கடகம் :

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வாகனம் தொடர்பான பழுதுகளை சரி செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சூழ்நிலைகளை அறிந்து முடிவுகளை எடுப்பது நன்மையளிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வி தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

வழிபாடு :
திங்கட்கிழமைதோறும் சிவபெருமானை வழிபாடு செய்து வர பொருள் வரவு அதிகரிக்கும்.

சிம்மம் :

சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். எந்தவொரு செயலிலும் கோபமின்றி பொறுமையுடன் செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். புதிய தொழில் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெற்றோர்களின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயமான பலன்கள் உண்டாகும். மனதில் இருக்கும் எண்ணங்களை மற்றவர்களை நம்பி வெளிப்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வர சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.

கன்னி :

பேச்சுக்களில் கோபமின்றி பொறுமையுடன் உரையாடவும். தனவரவுகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் காணப்படும். மாணவர்கள் வாகனப் பயணங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் மேம்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் அமையும்.

வழிபாடு :
முன்னோர்களை வழிபாடு செய்து வர செய்யும் முயற்சிகளில் உதவிகள் கிடைக்கும்.

துலாம் :

புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வேகமின்றி பொறுமையுடன் செயல்படுவது காரியவெற்றிக்கு வழிவகுக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்பது தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.

வழிபாடு :
நரசிம்மரை வழிபட நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

விருச்சிகம் :

ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பொருள் இலாபம் மேம்படும். பிரபலமான நபர்களின் மூலம் அறிமுகமும், ஆதாயமும் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வேலையாட்களிடம் பொறுமையுடன் செயல்பட்டால் காரியவெற்றி பெறுவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் அகலும்.

தனுசு :

குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தையிடம் தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்ப்பது நல்லது. நிலுவையில் இருந்துவந்த உத்தியோக பணிகளை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். உயர்நிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவரின் மூலம் பொருளாதாரம் மேம்படும்.

வழிபாடு :
ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வழிபாடு செய்து வர நன்மைகள் நடைபெறும்.

மகரம் :

ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தம்பதியர்கள் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது கவனம் வேண்டும்.

வழிபாடு :
துர்க்கையம்மனை விளக்கேற்றி வழிபடுவதால் நற்பலன்கள் உண்டாகும்.

கும்பம் :

உரையாடும் பொழுது வார்த்தைகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் சுபிட்சம் ஏற்படும். தம்பதியர்களுக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகள் ஈடேறும்.

வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் நவகிரக குருவை வழிபாடு செய்து வர சுபகாரியங்கள் நடைபெறும்.

மீனம் :

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் தொழில் சார்ந்த துறையில் புதுமை ஏற்படும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான பொறுப்புகள் கிடைக்கும். புதியதாக திருமணமான தம்பதியர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். தொழில் சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

வழிபாடு :
தட்சிணாமூர்த்தியை வழிபட விருப்பங்கள் நிறைவேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031