• ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (11.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (11.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

2 weeks ago
27
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (11.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். முக்கியமான சில காரியங்களை செய்து முடிக்க அலைச்சல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளால் அனுகூலமான சூழல் அமையும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும், சிந்தனைகளும் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்
அஸ்வினி : தெளிவு கிடைக்கும்.
பரணி : அனுகூலம் உண்டாகும்.
கிருத்திகை : முயற்சிகள் மேம்படும்.

ரிஷபம் :

பிள்ளைகள் பிடிவாதமாக சில விஷயங்களில் செயல்படுவார்கள். மனதிற்கு நெருக்கமானவர்கள் சில நேரங்களில் உதாசீனப்படுத்தும் விதமாக நடந்து கொள்வார்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் காணப்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : பொறுமை வேண்டும்.
ரோகிணி : மந்தமான நாள்.
மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

மிதுனம் :

முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். போட்டி தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவுகள் எடுக்கவும். உத்தியோக மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.
திருவாதிரை : ஆலோசனைகள் வேண்டும்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.

கடகம் :

பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக் கொடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிவட்டார தொடர்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
புனர்பூசம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
பூசம் : தனவரவுகள் மேம்படும்.
ஆயில்யம் : அனுபவம் உண்டாகும்.

சிம்மம் :

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். வாரிசுகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனை தொடர்பான செயல்பாடுகளால் இலாபம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திரம் : இலாபம் மேம்படும்.

கன்னி :

உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். திட்டமிட்ட பணிகளை எதிர்பார்த்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வாகன வசதிகள் மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்து மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
அஸ்தம் : எண்ணங்கள் ஈடேறும்.
சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.

துலாம் :

மனதில் தன்னம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் செய்யும் முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும். உத்தியோக உயர்வு தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த எண்ணங்கள் ஈடேறும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
சித்திரை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சுவாதி : ஆதரவு கிடைக்கும்.
விசாகம் : முயற்சிகள் ஈடேறும்.

விருச்சிகம் :

மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உணர்ச்சிவசப்பட்டு சில முடிவுகளை எடுக்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தனவரவுகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அனுஷம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
கேட்டை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
தனுசு :
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய செயல்பாடுகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்து கொள்ளவும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
பூராடம் : மனம் மகிழ்வீர்கள்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.

மகரம் :

ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். நயமான பேச்சுக்களின் மூலம் தனலாபம் அடைவீர்கள். உடனிருப்பவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
திருவோணம் : ஆர்வம் உண்டாகும்.
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.

கும்பம் :

அலுவலகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் செய்யும் சிறு மாற்றங்களின் மூலம் இலாபம் மேம்படும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்தித்து மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
சதயம் : இலாபம் மேம்படும்.
பூரட்டாதி : மனம் மகிழ்வீர்கள்.

மீனம் :

தந்தைவழி உறவினர்களின் மூலம் தொழில் சார்ந்த ஆதாயம் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பும், புதிய அனுபவமும் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் அறிவுரைகளும், ஒத்துழைப்பும் மனதிருப்தியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : ஆதாயம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : திருப்தியான நாள்.
ரேவதி : ஆசைகள் நிறைவேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031