வரலாற்றில் இன்று – 30.11.2020 ஜெகதீஷ் சந்திர போஸ்

2 months ago
57

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பங்களாதேஷில், ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார்.

லண்டனில் இருக்கும்போது லார்ட் ரிலே என்ற அறிவியல் அறிஞரின் தொடர்பு இவருக்கு கிடைத்தது. அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் துணையோடு தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் போஸ் பெரும் ஆர்வம் காட்டினார்.

கொல்கத்தா மாநிலக்கல்லூரியில் ஜெகதீஷ் சந்திர போஸ் இயற்பியல் துறையில் விரிவுரையாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு ஆங்கிலேயர்களுக்குக் கொடுப்பதில் 2ஃ3 பங்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது. இதற்கு காரணம் இந்தியர்கள் அறிவியல் துறையில் பின்தங்கியவர்கள், அவர்கள் முழு ஊதியத்தையும் வாங்க தகுதி அற்றவர்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் ஜெகதீஷ் சந்திர போஸின் அறிவுக்கூர்மையை பாராட்டி அவருக்கு முழு ஊதியமும் வழங்கப்பட்டது. நிலுவையில் இருந்த தொகையும் வழங்கப்பட்டது.

இயற்பியல் அறிஞரான இவர் ரேடியோ அலைகளில் ஆய்வு செய்து, மார்க்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பினை கண்டுபிடித்தார். இவர் இயற்றிய நூல்கள் உயிரற்றவைகளின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-Living) மற்றும் தாவரங்களின் நரம்புச் செயலமைவு (The Nervous Mechanism of Plants).

ஜெகதீஷ் சந்திர போஸ் தாம் மேற்கொண்ட அனைத்து அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பெரும் வெற்றியையும், புகழையும் ஈட்டினார். இந்தியாவின் புகழை உலகெங்கும் மிளிரச் செய்த இவர் 1937ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1872ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி உலகின் முதலாவது அனைத்துலக கால்பந்துப்போட்டி கிளாஸ்கோவில் ஸ்காட்லாந்துக்கும், இங்கிலாந்துக்கும் இடையில் நடைபெற்றது.

1948ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி புகழ்பெற்ற நடிகை கே.ஆர்.விஜயா கேரளா மாநிலத்திலுள்ள திருச்சூரில் பிறந்தார்.

1990ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி இந்திய திரைப்பட நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன் மறைந்தார்.

2012ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜரால் மறைந்தார்.

2013ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி அமெரிக்க நடிகர் பால் வாக்கர் மறைந்தார்.

2018ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத்தலைவர் ஜார்ஜ் புஷ் மறைந்தார்.

1 thought on “வரலாற்றில் இன்று – 30.11.2020 ஜெகதீஷ் சந்திர போஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031