• ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (30.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (30.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

2 months ago
56
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (30.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

அலைச்சல்களுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். செய்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அஸ்வினி : ஆதாயம் கிடைக்கும்.
பரணி : இலாபம் உண்டாகும்.
கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

ரிஷபம் :

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றும். முக்கியமான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் உண்டாகும்.

மிதுனம் :

ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் குறையும். ஆன்மிகம் சம்பந்தமான பயணங்களின் மூலம் மனநிம்மதி கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசவும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : சேமிப்புகள் குறையும்.
திருவாதிரை : மாற்றங்கள் ஏற்படும்.
புனர்பூசம் : கீர்த்தி உண்டாகும்.

கடகம் :

மூத்த உடன்பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் இலாபம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.

சிம்மம் :

எதிர்பார்ப்புகள் காலதாமதமாக நிறைவேறும். பணிகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். வாதத்திறமையால் கீர்த்தி உண்டாகும். தொழிலில் புதிய நபர்களால் பொருள் இலாபம் கிடைக்கும். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்
மகம் : காலதாமதம் உண்டாகும்.
பூரம் : இலாபம் கிடைக்கும்.
உத்திரம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

கன்னி :

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். புதிய வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கண்பார்வை சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொண்டு சேமிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : அறிவு வெளிப்படும்.
அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சித்திரை : பிரச்சனைகள் குறையும்.

துலாம் :

மனதில் அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். தொழில் விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். சிலருக்கு நினைத்தது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். தனம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
சித்திரை : எண்ணங்கள் மேலோங்கும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : மந்தமான நாள்.

விருச்சிகம் :

நிர்வாகம் சம்பந்தமான புதிய முடிவுகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கூட்டுத்தொழிலில் இலாபம் மேம்படும். தொழில் சம்பந்தமான பண உதவிகள் கிடைக்கும். எதிர்பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
கேட்டை : ஆதாயம் உண்டாகும்.

தனுசு :

பழைய கடன்களை அடைக்க முயற்சிகளை செய்வீர்கள். நெருக்கமானவர்களிடம் சிந்தித்து பேசுவது நல்லது. தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பிறரை விமர்சிப்பதால் தேவையற்ற இன்னல்கள் ஏற்படலாம். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : சிந்தித்து பேசவும்.
பூராடம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.

மகரம் :

மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். நண்பர்களின் உதவியால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக சொந்த ஊர் பயணங்களை மேற்கொள்வீர்கள். கலை சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் வாழ்க்கையில் மாற்றமான தருணங்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : அபிவிருத்தி உண்டாகும்.
திருவோணம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அவிட்டம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.

கும்பம் :

வழக்குகள் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். ஞாபகமறதியால் சில இன்னல்களுக்கு ஆளாக நேரிடலாம். உறவினர்களையும், நண்பர்களையும் பற்றி புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களிடம் பொறுமை காக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.
சதயம் : புரிதல் உண்டாகும்.
பூரட்டாதி : பொறுமை வேண்டும்.

மீனம் :

பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் வெளியே சென்று வருவீர்கள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். வாகனங்களை பராமரிப்பதற்கான செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : திருப்திகரமான நாள்.
ரேவதி : எதிர்ப்புகள் நீங்கும்.

1 thought on “இன்றைய தினப்பலன்கள் (30.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031