• ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (29.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (29.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

2 months ago
35
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (29.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். நண்பர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். அந்நியர்களின் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் பொறுமையுடன் செயல்படவும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : எண்ணங்கள் தோன்றும்.
பரணி : முன்னேற்றம் ஏற்படும்.
கிருத்திகை : இலாபம் உண்டாகும்.

ரிஷபம் :

உறவினர்களின் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தாயின் ஆதரவால் மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரோகிணி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

மிதுனம் :

போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். முயற்சிகளின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : வெற்றிகரமான நாள்.
திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் : செலவுகள் ஏற்படும்.

கடகம் :

ஆன்மிக பணிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். கால்நடைகளால் இலாபம் கிடைக்கும். மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : உயர்வான நாள்.
பூசம் : கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள்.
ஆயில்யம் : இலாபம் கிடைக்கும்.

சிம்மம் :

மனை சம்பந்தமான சுபவிரயங்கள் ஏற்படும். நற்செயல்களால் பாராட்டப்படுவீர்கள். ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உயர்கல்வி சம்பந்தமான பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மகம் : பாராட்டப்படுவீர்கள்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : அனுகூலமான நாள்.

கன்னி :

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இளைய உடன்பிறப்புகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து பழைய பிரச்சனைகளை முடிப்பீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். சமூக சேவை புரிபவர்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அஸ்தம் : கனிவாக நடந்து கொள்ளவும்.
சித்திரை : கவனம் வேண்டும்.

துலாம் :

நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் சூழல் அமையும். குடும்பத்தில் நெருக்கடியான சூழல் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். பெரியோர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். பேச்சில் நிதானமும், பொறுமையும் தேவை.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
சித்திரை : நெருக்கடியான நாள்.
சுவாதி : சேமிப்புகள் குறையும்.
விசாகம் : அனுசரித்து செல்லவும்.

விருச்சிகம் :

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். பெரியவர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
விசாகம் : ஒற்றுமை உண்டாகும்.
அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
கேட்டை : நம்பிக்கை அதிகரிக்கும்.

தனுசு :

மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். நெருக்கமான நபர்களிடத்தில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த பணவரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : காலதாமதம் உண்டாகும்.
பூராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.

மகரம் :

எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். எதிர்காலம் தொடர்பான புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். போட்டிகளில் எதிர்பார்த்த பரிசுகள் கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறுவதில் சிறு தடங்கல்கள் ஏற்படும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சேமிப்புகள் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : பொருள் வரவு உண்டாகும்.
திருவோணம் : பரிசுகள் கிடைக்கும்.
அவிட்டம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

கும்பம் :

மனைவியின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். தொழிலில் அபிவிருத்தி செய்வீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான முயற்சிகள் கைகூடும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். எண்ணங்களில் புதுவிதமான மாற்றங்கள் தோன்றும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : முயற்சிகள் கைகூடும்.
பூரட்டாதி : நட்பு கிடைக்கும்.

மீனம் :

புதிய முயற்சிகளில் எண்ணிய இலாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் மேன்மை உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். தாய்மாமன் உறவுகளால் ஆதரவான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.
உத்திரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
ரேவதி : ஆதரவான நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031