• ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (27.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (27.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

2 months ago
37
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (27.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

மனதில் இனம்புரியாத பயம், கவலைகள் ஏற்பட்டு மறையும். மற்றவர்களின் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் நன்மை உண்டாகும். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : கவலைகள் மறையும்.
பரணி : நிதானம் வேண்டும்.
கிருத்திகை : பொறாமைகள் குறையும்.

ரிஷபம் :

புதிய நபர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வெளிநாட்டு பயணங்களில் ஆர்வம் உண்டாகும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் ஆசைகள் நிறைவேறும். பிரிந்து சென்றவர்கள் நெருங்கி வருவார்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : ஆசைகள் நிறைவேறும்.
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

மிதுனம் :

சமூக பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத செய்திகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றும். இழுபறியாக இருந்துவந்த பணிகள் நிறைவடையும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : கீர்த்தி உண்டாகும்.
திருவாதிரை : நெருக்கடியான நாள்.
புனர்பூசம் : இழுபறிகள் நீங்கும்.

கடகம் :

தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். திட்டமிட்ட முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அரசு தொடர்பான பணிகளால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் இலாபம் பெறுவீர்கள். மாமன்வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
புனர்பூசம் : சிறப்பான நாள்.
பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ஆயில்யம் : அனுகூலம் உண்டாகும்.

சிம்மம் :

அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். சிலருக்கு வீடு மாற்றம் அல்லது உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : சிந்தனைகள் மேலோங்கும்.
உத்திரம் : வெற்றி கிடைக்கும்.

கன்னி :

குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். வரவேண்டிய தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கும். செயல்பாடுகளின் தன்மை அறிந்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : காலதாமதம் உண்டாகும்.
சித்திரை : விமர்சனங்கள் ஏற்படலாம்.

துலாம் :

எந்தவொரு செயல்களையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கஷ்டங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களின் உதவிகளால் வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : சுறுசுறுப்பான நாள்.
சுவாதி : மனக்கஷ்டங்கள் நீங்கும்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.

விருச்சிகம் :

மனதிற்கு நெருங்கியவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மனதிற்கு விருப்பமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையளிக்கும். கடன் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்
விசாகம் : பாராட்டுகள் கிடைக்கும்.
அனுஷம் : செலவுகள் ஏற்படும்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.

தனுசு :

வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : நன்மையான நாள்.
பூராடம் : நெருக்கடிகள் குறையும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.

மகரம் :

வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவோணம் : பொறாமைகள் குறையும்.
அவிட்டம் : அனுபவம் கிடைக்கும்.

கும்பம் :

எந்தவொரு செயல்களையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நிலவும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : வெற்றி கிடைக்கும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.

மீனம் :

நண்பர்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் இலாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சுப முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
பூரட்டாதி : நன்மதிப்பை பெறுவீர்கள்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும்.
ரேவதி : அன்யோன்யம் அதிகரிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031