• ராசிபலன்
  • கார்த்திகை மாத ராசிபலன்கள்…!! ஜோதிடர் அ.மோகன்ராஜ்

கார்த்திகை மாத ராசிபலன்கள்…!! ஜோதிடர் அ.மோகன்ராஜ்

5 months ago
114
  • ராசிபலன்
  • கார்த்திகை மாத ராசிபலன்கள்…!! ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

மனதில் இருந்துவந்த வீண் கவலைகள் நீங்கும். தனவரவுகள் சாதகமாக இருக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். பிடிவாத குணத்தை குறைத்து காரியங்களில் கவனம் செலுத்தினால் காரியவெற்றி கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான சூழல் உண்டாகும். புதிய நட்புகளின் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனக்கஷ;டங்கள் ஏற்படும். மாணவர்கள் கல்வி தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

வழிபாடு :
குருமார்களை வியாழக்கிழமைதோறும் வழிபாடு செய்து வர மேன்மை உண்டாகும்.

ரிஷபம் :

பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதிற்கு விருப்பமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிக பயணங்களை மேற்கொள்வதற்கான விருப்பம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். அரசியல் துறையில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்பட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கலைத்துறையினருக்கு சக நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் வரவும், ஆதரவும் கிடைக்கும்.

வழிபாடு :
துர்க்கை அம்மனை அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்து வர எண்ணத்தெளிவு கிடைக்கும்.

மிதுனம் :

சாதுர்யமான பேச்சுக்களால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் இலாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், மதிப்புகளும் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான பணிகளில் இருந்துவந்த காலதாமதம் அகலும். மனைகள் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகலாம்.

வழிபாடு :
மகா விஷ;ணுவை வழிபாடு செய்து வர இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

கடகம் :

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். எந்தவொரு செயலையும் சிந்தித்து செய்வது நல்லது. மனதில் ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாரிசுகள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிசுமை சற்று குறைவாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான சூழல் உண்டாகும். புதிய ஆர்டர்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

வழிபாடு :
திங்கட்கிழமைதோறும் வராகி அம்மனை வழிபாடு செய்து வர மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சிம்மம் :

வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள். உறவுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிர்வாகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். போட்டி, பந்தயங்களில் சாதகமான சூழல் அமையும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். பயணங்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் உடைமைகளில் கவனம் வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். கலைஞர்களுக்கு திறமைகள் வெளிப்பட்டு கீர்த்தி உண்டாகும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். கலைத்துறையினருக்கு முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். அரசியலில் உள்ளவர்களுக்கு அனுகூலமான சூழல் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வர உத்தியோகம் தொடர்பான இன்னல்கள் குறையும்.

கன்னி :

பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் நேரிடலாம். மேலும் கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திட்டமிட்ட செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். வாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் மனம் விட்டுப்பேசுவது நன்மையளிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்கள் கோபமின்றி பொறுமையுடன் செயல்பட வேண்டும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்கள் பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் நேரத்தை குறைத்து கொள்வது நல்லது.

வழிபாடு :
நவகிரகத்தில் இருக்கும் புதனுக்கு அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்து வர முயற்சிகள் வெற்றி பெறும்.

துலாம் :

சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வாக்குவன்மைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மறைமுகமான எதிர்ப்புகள் குறையும். வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். பங்குதாரர்களுடன் இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படலாம். கலைத்துறையினர் மனதில் நம்பிக்கையுடனும், புதிய பொலிவுடனும் காணப்படுவார்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு தனவரவுகள் மேம்படும். மாணவர்கள் அனைவரிடமும் அனுசரித்து செல்ல வேண்டும்.

வழிபாடு :
சப்த கன்னிகளை அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்து வர நன்மைகள் உண்டாகும்.

விருச்சிகம் :

காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் அகலும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களிடம் கருத்துக்களை பரிமாறும்போது கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் அகலும். உஷ;ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டாலும், சக ஊழியர்களால் சாதகமான சூழல் ஏற்படும். புதிய வேலைகள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல்கள் உண்டாகும். அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றங்கள் நேரிடலாம். மாணவர்களுக்கு கல்விக்கான செலவுகள் உண்டாகலாம்.

வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகரை வழிபாடு செய்து வர தனம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

தனுசு :

வெளியூர் பயணங்களால் இலாபம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சபைகளில் தனக்கு ஆதரவாக இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். தாய்மாமன் உறவுவழியில் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். செய்தொழிலில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு எண்ணிய காரியங்கள் தாமதகமாக நடைபெறும். அரசு தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு புதிய முயற்சிகளின் மூலம் அனுகூலம் உண்டாகும்.

வழிபாடு :
சரஸ்வதியை வழிபாடு செய்து வர கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும்.

மகரம் :

நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். கற்ற கலைகளால் எதிர்பாராத இலாபம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சாதகமான பலன்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சர்வதேச வணிகத்தில் எண்ணிய இலாபம் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும்போது கவனத்துடன் செயல்படவும். கலைத்துறையினருக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ப பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.

வழிபாடு :
நவகிரகத்தில் இருக்கும் சந்திரனை வழிபாடு செய்து வர தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

கும்பம் :

சகோதரர்களால் அனுகூலமான சூழல் ஏற்படும். கல்வி சம்பந்தமான பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். எந்தவொரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றி அடைவீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வர மனதில் தைரியம் உண்டாகும்.

மீனம் :

உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு கீர்த்தி பெறுவீர்கள். வாதத்திறமையால் இலாபம் உண்டாகும். தாயின் உடல்நலனில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். சக ஊழியர்களிடம் உங்களின் செல்வாக்கு உயரும். சுயதொழில் புரிபவர்கள் தொழிலில் புதுவிதமான யுக்திகளை கையாளுவார்கள். தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். அரசாங்க பணியில் இருந்துவந்த இடர்பாடுகள் நீங்கும். ஆராய்ச்சி சம்பந்தமான பணியில் எண்ணிய பலன்கள் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள்.

வழிபாடு :
தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்து வர தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

April 2021
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930