• ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (15.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (15.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

1 year ago
180
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (15.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

மாணவர்கள் பொழுதுபோக்கு விஷயங்களை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் காரியத்தடைகள் நேரிடலாம். பணியில் பதற்றத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : நிதானத்துடன் செயல்படவும்.

ரிஷபம் :

வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். தந்தையுடன் கலந்து உரையாடும்போது நிதானம் வேண்டும். வெளியூர் தொடர்பான தொழில் வாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்படும். வர்த்தக முதலீடுகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சில காரியங்கள் நடைபெறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : முன்னேற்றம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : இலாபம் கிடைக்கும்.

மிதுனம் :

பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாலின மக்களிடம் அமைதி காக்கவும். வாதத்திறமையால் இலாபம் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.
திருவாதிரை : அமைதி வேண்டும்.
புனர்பூசம் : தடைகள் நீங்கும்.

கடகம் :

எடுத்த பணியை விடாப்பிடியாக இருந்து செய்து முடிப்பீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பிறருக்கு உதவும்போது கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் நேரிடலாம். நுட்பங்களை பயில்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூசம் : வாக்குவாதங்கள் நேரிடலாம்.
ஆயில்யம் : வாய்ப்புகள் உண்டாகும்.

சிம்மம் :

பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மனை விவகாரங்களில் எதிர்பாராத இலாபம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தாயிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : இலாபம் கிடைக்கும்.
பூரம் : திறமைகள் வெளிப்படும்.
உத்திரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

கன்னி :

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். பணியில் எதிர்பாராத இழுபறியான சூழல் காணப்படும். மனை தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். தனவரவால் சேமிப்புகள் அதிகரிக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு புதுவிதமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : சுபிட்சம் உண்டாகும்.
அஸ்தம் : இழுபறியான நாள்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம் :

உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத சில இடமாற்றம் நேரிடும். வெளியூர் பயணங்களில் நன்மை உண்டாகும். வாக்குவன்மையால் எண்ணிய செயல்பாடுகளில் அனுகூலம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : திருப்தியான நாள்.
சுவாதி : இடமாற்றம் நேரிடும்.
விசாகம் : அனுகூலம் ஏற்படும்.

விருச்சிகம் :

உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எண்ணங்களில் தெளிவு பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் ஏற்படும். நண்பர்களின் வட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
கேட்டை : கலகலப்பான நாள்.

தனுசு :

மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். தொழில் சம்பந்தமான பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். வாகனப் பயணங்களின்போது ஆவணங்களில் கவனம் வேண்டும். பிறரிடம் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாகும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : எண்ணங்கள் நிறைவேறும்.
பூராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திராடம் : பிரச்சனைகள் தீரும்.

மகரம் :

எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் உண்டாகும். திட்டமிட்ட செயல்பாடுகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். புதுவிதமான ஆசைகள் மனதில் தோன்றும். பிறமொழி பேசுபவர்களின் உதவிகள் கிடைக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திராடம் : துணிச்சல் உண்டாகும்.
திருவோணம் : ஆசைகள் தோன்றும்.
அவிட்டம் : ஆர்வம் உண்டாகும்.

கும்பம் :

குடும்பத்தினருடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவுநிலை மேம்படும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மன அமைதி உண்டாகும். வாழ்க்கை தரம் உயரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : உறவுநிலை மேம்படும்.
சதயம் : தனவரவுகள் கிடைக்கும்.
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

மீனம் :

தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனைகள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சுபச்செலவுகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : மரியாதைகள் உயரும்.
உத்திரட்டாதி : கவலைகள் குறையும்.
ரேவதி : சிந்தித்து செயல்படவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930