• ம் நானும்
  • இன்றைய தினப்பலன்கள் (12.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (12.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

1 year ago
129
  • ம் நானும்
  • இன்றைய தினப்பலன்கள் (12.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

வீட்டிற்கு தேவையான வசதியை மேம்படுத்துவீர்கள். நெருக்கமானவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும். குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது. இடமாற்றம் பற்றிய சுபச்செய்திகள் கிடைக்கும். கனிவாக பேசி எண்ணிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களோடு இருந்துவந்த பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : வசதிகள் மேம்படும்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.

ரிஷபம் :

புதிய முயற்சிகளால் எண்ணிய வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தாருடன் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : வெற்றிகரமான நாள்.
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : இலாபம் அதிகரிக்கும்.

மிதுனம் :

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். தாய்வழியில் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.
திருவாதிரை : நம்பிக்கை அதிகரிக்கும்.
புனர்பூசம் : மனக்கசப்புகள் குறையும்.

கடகம் :

உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எண்ணிய காரியங்கள் எண்ணிய விதத்தில் நடைபெறும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தாயாருடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். வாகனப் பராமரிப்பு செலவுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : பிரச்சனைகள் குறையும்.
ஆயில்யம் : மாற்றங்கள் உண்டாகும்.

சிம்மம் :

கனிவான பேச்சுக்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக்கூடாது என்று முடிவெடுப்பீர்கள். தேவையற்ற பதற்றத்தை தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் சேமிப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
உத்திரம் : பதற்றத்தை தவிர்க்கவும்.

கன்னி :

வியாபாரத்தில் செய்யும் சில மாற்றங்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். மனதில் தோன்றும் சில நினைவுகளின் மூலம் புத்துணர்ச்சி உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப்பேசுவதால் புரிதல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : புத்துணர்ச்சி ஏற்படும்.
சித்திரை : புரிதல் உண்டாகும்.

துலாம் :

வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக முடியும். தொழில் விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். விவசாயப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
சித்திரை : பயணங்கள் சாதகமாகும்.
சுவாதி : சோர்வு நீங்கும்.
விசாகம் : மேன்மையான நாள்.

விருச்சிகம் :

உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். தொழில் தொடர்பான வெளிவட்டார நட்பு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பணி தொடர்பான புதிய பொறுப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : இலாபம் அதிகரிக்கும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : பொறுப்புகள் கிடைக்கும்.

தனுசு :

திட்டமிட்ட காரியங்களில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். பொதுக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணங்களால் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். அனுபவ அறிவால் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூராடம் : ஆர்வம் உண்டாகும்.
உத்திராடம் : முன்னேற்றமான நாள்.

மகரம் :

உறவினர்களுக்கிடையே செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். காணாமல் போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
திருவோணம் : கலகலப்பான நாள்.
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கும்பம் :

எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். மனதில் குழப்பமும், கவலையும் உண்டாகும். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். வழக்கு தொடர்பான செயல்பாடுகளால் விரயங்கள் உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : குழப்பமான நாள்.
சதயம் : இடமாற்றம் ஏற்படலாம்.
பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

மீனம் :

மனைவி வழியில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : நன்மையான நாள்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரேவதி : முன்னேற்றமான நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930