உயிர்ப்பூ-ரிஷபன்

1 year ago
220

ரிஷபன் சாருக்கு மிகப்பெரிய பூங்கொத்து தரவேண்டும். அழகான உயிரோவியத்தை உயிர்ப்பூ என்னும் தலைப்பில் உங்கள் விரல்கள் வரைந்திருக்கிறது. உயிர்ப்பூ – 10 இதழ்களின் வாசம் படித்து முடித்தபின்னும் அகலாமல் அது மறைய இன்னும் நாட்கள் பல ஆகலாம். மாருதி அவர்களின் ஓவியம் மனதிற்கு இன்னும் ரம்மியமாய். இதத்திற்கு இதம் சேர்த்ததைப் போல

அதிகமான வார்த்தைப் பிரயோகங்கள் வீடு வெறும் கட்டிடமாக சில நாட்களாகவே பார்க்கப்பட்டு இருக்கிறது ஆனால் அதற்கும் உணர்வுகள் ஒன்று நம்மை அக்கறையாய் அனுசரணையாய் பல நேரங்களில் அந்த சுவர்கள் தாங்குகிறது. உணர்வுகளின் கலவைதான் மனிதன். அவனுக்குள் பிரவாகம் எடுக்கும் கற்பனைகளின் வடிகால்தான் எழுத்துக்கள். அதை அழகாகப் பிரயோகித்திருக்கும் ஒரு சிற்பியாய் ரிஷபன் அவர்களைப் பார்க்க முடிகிறது. முதலில் ஒரே நாளில் பத்து அத்தியாயங்கள் எனக்கெல்லாம் அது சாத்தியமே இல்லை.

“அடுத்தவர் நம்மை யாரென்று கணித்து விடுகிற அளவுக்கு வாழ்ந்திருப்பது பலமா, பலவீனமா.”

“//வீடு சிலரை விரட்டி …சிலரை கொண்டாடுகிறது. சிலரை சகித்து சிலரை கொஞ்சுகிறது…வீடும் இழைந்து கொடுத்தது…/”

ஒவ்வொரு தொடரின் தொடக்கமும் நிறைய எதிர்பார்ப்புகளை சுமந்து அதை நேர்த்தியாக பூர்த்தியும் செய்திருக்கிறது. அம்மா, கெளரி, புவனா, வசந்தி அவளின் கணவர் அக்கம் பக்கத்தினர் என எல்லாருமே கண்முன் வந்து உலவினாற் போல் ஒரு தோற்றம்,

கதை நாவல் என்று ஒதுக்கிவிடமுடியாமல் அத்தனை இயல்பு உயிர்ப்பூ !

அன்பு ஒன்றுதான் மனிதனை மனிதனாகவே வாழவைக்கும் உங்கள் எழுத்துக்கள்

வாழ்த்துக்கள் ரிஷபன் ஸார்

நீண்ட நாட்களாகவே சங்கப்பலகையில் வரும் கதைகளை தேர்வு செய்து மின்கைத்தடியில் விமர்சனம் தரவேண்டும் என்பது என் ஆசை ஆனால் நேரம் கிடைக்காததால் எழுத முடியவில்லை நிறைய வாசிக்கிறேன் இரவு நேரங்களில் ! சிலவற்றை குறித்தும் வைத்திருக்கிறேன் தீபாவளி ஸ்பெஷலாக சில கதைகளை ஹைலெட் பண்ணவேண்டும் என்று நினைத்திருந்தேன். முதல் ஆரம்பம் இன்று ரிஷபன் சாரின் நாவல் உயிர்ப்பூ !

சங்கப்பல​கையில் ​பு​தைந்திருக்கும்​பொக்கிஷங்களில் “உயிர்ப்பூ” தனி ரகம்

1 thought on “உயிர்ப்பூ-ரிஷபன்

  1. அன்பு நன்றி.
    சங்கப்பலகை தந்த உற்சாகம், எழுதினேன்.
    படைப்பாளிக்கு இதுவே சிறந்த சன்மானம். கொண்டாடப்படுவது.
    மீண்டும் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930