• ராசிபலன்
  • வார ராசிபலன்கள் (26.10.2020 – 01.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

வார ராசிபலன்கள் (26.10.2020 – 01.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

4 weeks ago
31
  • ராசிபலன்
  • வார ராசிபலன்கள் (26.10.2020 – 01.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சமூக சேவை புரிபவர்களுக்கு இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். நண்பர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்க்கவும். தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான புதிய முடிவுகளில் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும்.

வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர குடும்பத்தில் உள்ள வாக்குவாதங்கள் குறைந்து சுபிட்சம் உண்டாகும்.

ரிஷபம் :

புத்திரர்கள் வழியில் சுபச்செயல்கள் தொடர்பான செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு பணி தொடர்பான வெளியூர் சென்று பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சம்பந்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். கொடுக்கல், வாங்கல் போன்ற செயல்பாடுகளில் கவனமாக இருக்கவும்.

வழிபாடு :
புதன்கிழமைதோறும் பெருமாளை வழிபாடு செய்துவர தனவரவுகளில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும்.

மிதுனம் :

மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும்.

வழிபாடு :
புதன்கிழமைதோறும் குலதெய்வத்தை வழிபாடு செய்துவர நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

கடகம் :

திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் எண்ணிய வெற்றியை அடைய இயலும். மனதில் எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். புதிய வேலைத்தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமமாகும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்று மனம் மகிழ்வீர்கள்.

வழிபாடு :
சரபேஸ்வரரை வழிபாடு செய்துவர எண்ணத்தெளிவு உண்டாகும் மற்றும் உடல் சோர்வு நீங்கும்.

சிம்மம் :

தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப நபர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனுசரித்து செல்லவும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாழ்க்கை துணைவரிடம் பொறுமை வேண்டும். பயணங்களின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் சீராகும்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்துவர உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அனுகூலம் உண்டாகும்.

கன்னி :

மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் வேண்டும். சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தொழில் முனைவோருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகளும், இலாபமும் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுக்கூட்ட பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். அந்நியர்களின் மூலம் இலாபம் உண்டாகும். வர்த்தக பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். தொழில் அலைச்சல்களால் அனுகூலமான இலாபம் கிடைக்கும்.

வழிபாடு :
திங்கட்கிழமைதோறும் அம்பிக்கையை வழிபாடு செய்துவர குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

துலாம் :

ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதன் மூலம் நெருக்கடியான சூழலை தவிர்க்க இயலும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சிறு சிறு செலவுகள் தோன்றி மறையும். துரிதமான செயல்பாடுகளால் எண்ணிய இலக்கை அடைவீர்கள். புதிய முயற்சிக்கேற்ப பலன்கள் கிடைக்கும். திடீர் யோகத்தால் எதிர்பாராத வரவுகள் உண்டாகும்.

வழிபாடு :
நரசிம்ம அவதாரத்தை புதன்கிழமைதோறும் வழிபாடு செய்துவர எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக கிடைக்கும்.

விருச்சிகம் :

நண்பர்களுடன் விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். இன்ப சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் வேலை சம்பந்தமான முயற்சிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். பிள்ளைகளால் சுபச்செலவுகள் உண்டாகும். கடனால் மனவருத்தங்கள் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குறுகிய தூர பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும்.

வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகனை வழிபாடு செய்துவர பெரியோர்களின் ஆசிகளும், வழிகாட்டுதல்களும் கிடைக்கும்.

தனுசு :

தொழிலில் கூட்டாளிகளிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாலின மக்களிடம் கவனத்துடன் இருக்கவும். தாய்வழி உறவினர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். பொருளாதாரம் மேன்மை அடையும். சாதுர்யமான பேச்சுக்களால் நன்மை உண்டாகும். அரசு அதிகாரிகளிடம் அமைதிப்போக்கினை கடைபிடிப்பதன் மூலம் தேவையற்ற வம்புகளை தவிர்க்கலாம்.

வழிபாடு :
புதன்கிழமைதோறும் சயன கோலத்தில் இருக்கக்கூடிய பெருமாளை வழிபாடு செய்துவர தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

மகரம் :

எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் இலாபம் உண்டாகும். எதிர்காலம் சம்பந்தமான திட்டங்களுக்கான பணியில் ஈடுபடுவீர்கள். மனைகளால் இலாபம் உண்டாகும். தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான சாதகமான சூழல் உண்டாகும். கௌரவ பதவிகளால் மதிப்புகள் உயரும். நண்பர்களுடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் துர்க்காதேவியை வழிபாடு செய்துவர மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும்.

கும்பம் :

எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடி உண்டாகும். பிள்ளைகளால் சுபச்செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் குறைந்து உறவுநிலை மேலோங்கும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள்.

வழிபாடு :
வராகிதேவியை செவ்வாய்க்கிழமைதோறும் வழிபாடு செய்துவர தொழில் தொடர்பான இன்னல்கள் குறையும்.

மீனம் :

செய்யும் வேலைகளில் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும். தாய்மாமன் உறவினர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். மனைகளில் வீடு கட்டுவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்களின் மூலம் பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் பொருட்சேர்க்கை உண்டாகும். துணிவுமிக்க தீர செயல்களால் மேன்மை உண்டாகும். நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். வாக்குவன்மையால் பாராட்டப்படுவீர்கள். இளைய சகோதரர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள்.

வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30