• ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (23.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (23.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

1 month ago
23
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (23.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த சில செயல்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எண்ணிய விதத்தில் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாகன மாற்றங்கள் தொடர்பான சிந்தனைகள் சிலருக்கு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அஸ்வினி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
பரணி : உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ரிஷபம் :

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகளின் மூலம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் நேரிடலாம். உயர் அதிகாரிகளின் மூலம் பயணங்களும், புதுவிதமான அனுபவங்களும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : அனுபவங்கள் கிடைக்கும்.

மிதுனம் :

எந்தவொரு புதிய செயலையும் மேற்கொள்ளும்போது சிந்தித்து செயல்படவும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மூலம் விரயங்கள் நேரிடலாம். மாணவர்கள் தற்பெருமையின்றி மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவது நன்மையளிக்கும். எதிர்கால சிந்தனைகளின் மூலம் மனதில் ஒருவிதமான பதற்றம் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.
திருவாதிரை : விரயங்கள் நேரிடலாம்.
புனர்பூசம் : பதற்றமான நாள்.

கடகம் :

திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் இலாபம் மேம்படும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ஆயில்யம் : இலாபம் மேம்படும்.

சிம்மம் :

எதிர்பாலின மக்களுக்கு எந்தவொரு உதவியும் செய்வதற்கு முன்பு சிந்தித்து செயல்பட வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மையை அளிக்கும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் உடைமைகள் மற்றும் கோப்புகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகம் : சிந்தித்து செயல்படவும்.
பூரம் : முன்னேற்றமான நாள்.
உத்திரம் : கவனம் வேண்டும்.

கன்னி :

சகோதரர்களிடம் உரையாடும் பொழுது சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். இலக்கியம் தொடர்பான பணிகளில் கற்பனைத்திறன் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது சுபிட்சத்தை ஏற்படுத்தும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : கற்பனைத்திறன் மேம்படும்.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.

துலாம் :

நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
சித்திரை : தனவரவுகள் கிடைக்கும்.
சுவாதி : பொறுப்புகள் குறையும்.
விசாகம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம் :

உத்தியோகம் தொடர்பான எதிர்பாராத இடமாற்றங்கள் நேரிடலாம். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் குழப்பமான மனநிலை உண்டாகும். இளைய சகோதரர்களின் ஆதரவின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த சில காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விசாகம் : இடமாற்றங்கள் நேரிடலாம்.
அனுஷம் : குழப்பமான நாள்.
கேட்டை : புரிதல் உண்டாகும்.

தனுசு :

எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். செய்யும் காரியங்களில் செயல்திறமைகள் மேம்படும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய நபர்களின் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : திறமைகள் மேம்படும்.
பூராடம் : ஆர்வம் உண்டாகும்.
உத்திராடம் : தெளிவு பிறக்கும்.

மகரம் :

உடனிருப்பவர்களின் தன்மை அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். தொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : அன்பு அதிகரிக்கும்.

கும்பம் :

வாடிக்கையாளர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் பெரியோர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நன்மையை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : அனுகூலமான நாள்.
சதயம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூரட்டாதி : பயணங்கள் சாதகமாகும்.

மீனம் :

கடன் தொடர்பான பணிகளின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் நிதானமுடன் செயல்படுவதன் மூலம் ஆதரவு கிடைக்கும். குடும்பம் தொடர்பான விவகாரங்களை மற்றவரிடம் பகிர்வதை தவிர்க்கவும். தேவையற்ற சந்தேக உணர்வுகளின் மூலம் நெருக்கமானவர்களிடம் வாக்குவாதங்கள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
ரேவதி : வாக்குவாதங்கள் நேரிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30