• ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (22.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (22.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

1 month ago
19
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (22.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்களை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப பெரியவர்களின் ஆசிகளும், வழிகாட்டுதலும் மனதில் திருப்தியான சூழலை உண்டாக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அஸ்வினி : அறிவு வெளிப்படும்.
பரணி : உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.

ரிஷபம் :

உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட்டு முடிவுகளை எடுக்கவும். முன்கோபத்தை தவிர்த்து உறவுகளிடம் பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கலாம். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகலாம். உத்தியோகத்தில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடுவதால் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
கிருத்திகை : நிதானம் வேண்டும்.
ரோகிணி : கோபத்தை தவிர்க்கவும்.
மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.

மிதுனம் :

செய்யும் முயற்சிகளில் இருந்துவந்த எதிர்ப்புகளை தாண்டி எண்ணிய இலக்கை அடைவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களின் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : முயற்சிகள் நிறைவேறும்.
திருவாதிரை : எண்ணங்கள் ஈடேறும்.
புனர்பூசம் : அனுபவம் கிடைக்கும்.

கடகம் :

வியாபாரம் தொடர்பான பணிகளில் செய்யும் மாற்றங்களின் மூலம் இலாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் அறிமுகத்தின் மூலம் மேன்மை ஏற்படும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் உயரும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
புனர்பூசம் : இலாபம் கிடைக்கும்.
பூசம் : மேன்மை ஏற்படும்.
ஆயில்யம் : சேமிப்புகள் உயரும்.

சிம்மம் :

பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். தொழிலில் புதுவித சலுகைகளை கொடுத்து இலாபம் காண்பீர்கள். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
பூரம் : கீர்த்தி உண்டாகும்.
உத்திரம் : ஆசிகள் கிடைக்கும்.

கன்னி :

உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகளை குறைத்து சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.
அஸ்தம் : சுபிட்சமான நாள்.
சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

துலாம் :

மனதில் நினைத்த செயல்களை செய்து முடிக்க அலைச்சல்கள் அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் எதிர்பார்ப்பை நிறைவேற்றி கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும். பிள்ளைகளின் மூலம் மனமகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
சித்திரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
சுவாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
விசாகம் : மந்தநிலை நீங்கும்.

விருச்சிகம் :

வாழ்க்கை துணைவரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தனவரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். தொழில் தொடர்பான முதலீடுகள் மேம்படும். முன்கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்பட வேண்டும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
அனுஷம் : முதலீடுகள் மேம்படும்.
கேட்டை : மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு :

உத்தியோகம் தொடர்பான பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஒற்றுமையுடன் செயல்படுவதன் மூலம் மேன்மை உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையுடனும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
பூராடம் : மேன்மை உண்டாகும்.
உத்திராடம் : தன்னம்பிக்கையான நாள்.

மகரம் :

மனதில் கற்பனைத்திறன் அதிகரிக்கும். தொழில் தொடர்பான பயணங்களின் மூலம் அலைச்சல்களும், அனுபவங்களும் கிடைக்கும். மற்றவர்களுக்கு ஆதாயமான செயல்களை செய்து மனம் மகிழ்வீர்கள். பிரபலமானவர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : கற்பனைத்திறன் அதிகரிக்கும்.
திருவோணம் : அனுபவங்கள் கிடைக்கும்.
அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.

கும்பம் :

உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : ஆதரவான நாள்.
சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.

மீனம் :

சகோதரர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் தடையாக இருந்தவர்கள் விலகி ஆதரவாக செயல்படுவார்கள். உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
ரேவதி : கருத்து வேறுபாடுகள் மறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30