• ராசிபலன்
  • நித்ராவின் வார ராசிபலன்கள் (19.10.2020 – 25.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

நித்ராவின் வார ராசிபலன்கள் (19.10.2020 – 25.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

1 month ago
28
  • ராசிபலன்
  • நித்ராவின் வார ராசிபலன்கள் (19.10.2020 – 25.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு கீர்த்தி பெறுவீர்கள். பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தாயின் உடல்நலனில் விழிப்புணர்வு வேண்டும். நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். விவாதங்களின் மூலம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான சூழல் உண்டாகும். எண்ணங்களில் மாற்றம் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

வழிபாடு :

வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்து வர குடும்பத்தில் உள்ள வாக்குவாதங்கள் குறைந்து சுபிட்சம் உண்டாகும்.

ரிஷபம் :

குறுகிய தூர பயணங்களால் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத சுபச்செய்திகளால் சுபச்செலவுகள் உண்டாகும். புதிய தொழில் செய்வதற்கான சிந்தனைகள் தோன்றும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். ஆராய்ச்சி சம்பந்தமான பணியில் எண்ணிய பலன்கள் உண்டாகும்.

வழிபாடு :

புதன்கிழமைதோறும் பெருமாளை வழிபாடு செய்து வர தனவரவுகளில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும்.

மிதுனம் :

குடும்ப பெரியவர்களின் ஆதரவால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் புதியவர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நன்மை அளிக்கும். எந்தவொரு செயலிலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படவும். பிறரிடம் வாக்குவாதங்கள் செய்வதை தவிர்க்கவும். தேவையற்ற சிந்தனைகளால் மனக்குழப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

வழிபாடு :

புதன்கிழமைதோறும் குலதெய்வத்தை வழிபாடு செய்து வர நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

கடகம் :

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட பயணங்களில் சில மாற்றங்களால் அனுகூலம் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று கவனத்துடன் செல்லவும். குலதெய்வ வழிபாட்டிற்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகளால் மேன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தி இலாபம் அடைவீர்கள். புத்திரர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

வழிபாடு :

சரபேஸ்வரரை வழிபாடு செய்துவர எண்ணத்தெளிவு உண்டாகும் மற்றும் உடல் சோர்வு நீங்கும்.

சிம்மம் :

மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும். சுயதொழில் சார்ந்த பயணங்கள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் சற்று கனிவுடன் நடந்து கொள்ளவும். எதிலும் நன்கு திட்டமிட்டு செயல்படவும். நினைத்த காரியத்தை பல தடைகளை கடந்து எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகளிடம் சற்று கனிவுடன் நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ப எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

வழிபாடு :

சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வர உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அனுகூலம் உண்டாகும்.

கன்னி :

உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். உறவினர்களின் வருகையினால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த தனவரவுகள் சற்று காலதாமதமாகும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல்களும், திறமைக்கேற்ற உயர்வும் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் மனதிற்கு புதிய நம்பிக்கையை அளிக்கும்.

வழிபாடு :

திங்கட்கிழமைதோறும் அம்பிக்கையை வழிபாடு செய்து வர குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

துலாம் :

நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த சில செயல்பாடுகள் சற்று காலதாமதமாகும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் சற்று

கவனமுடன் செயல்படவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறைவதற்கான முயற்சிகள் மேலோங்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சற்று அனுசரித்து நடந்து கொள்ளவும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில செய்திகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும்.

வழிபாடு :

நரசிம்ம அவதாரத்தை புதன்கிழமைதோறும் வழிபாடு செய்து வர எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக கிடைக்கும்.

விருச்சிகம் :

புதுவிதமான முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். நிலம் தொடர்பான பிரச்சனைகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும். விவசாயம் சார்ந்த செயல்பாடுகளில் சற்று காலதாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகளும், அலைச்சல்களும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சற்று அனுசரித்து செல்லவும். தொழிலில் சிறு சிறு மாறுதல்களை மேற்கொள்வதினால் நல்ல முன்னேற்றமான சூழல் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

வழிபாடு :

செவ்வாய்க்கிழமைதோறும் முருகனை வழிபாடு செய்து வர பெரியோர்களின் ஆசிகளும், வழிகாட்டுதல்களும் கிடைக்கும்.

தனுசு :

குடும்ப பெரியவர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் சற்று நிதானத்துடன் செயல்படவும். நண்பர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களால் சில மனக்கசப்புக்கள் நேரிடலாம். தந்தைவழி உறவுகளிடம்

சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும். தொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த இலாபம் காலதாமதமாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் சற்று நிதானத்துடன் செயல்படவும்.

வழிபாடு :

புதன்கிழமைதோறும் சயன கோலத்தில் இருக்கக்கூடிய பெருமாளை வழிபாடு செய்து வர தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

மகரம் :

மற்றவர்களின் செயல்பாடுகளை பற்றி விமர்சிப்பதை தவிர்க்கவும். தொழில் சார்ந்த பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். வாகனங்களில் செல்லும்போது சற்று கவனத்துடன் செல்லவும். பூர்வீக சொத்துக்களால் இலாபம் ஏற்படும். தந்தையிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் கருத்து வேறுபாடுகள் குறைந்து சுபிட்சம் உண்டாகும். முயற்சிக்கேற்ற பாராட்டுகள் காலதாமதமாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும்.

வழிபாடு :

வெள்ளிக்கிழமைதோறும் துர்க்காதேவியை வழிபாடு செய்து வர மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும்.

கும்பம் :

நிதமான செயல்பாடுகளால் எதிர்பார்த்த சாதகமான வெற்றி உண்டாகும். குடும்ப பெரியோர்களால் தொழில் சார்ந்த முயற்சிகளில் ஆதரவு கிடைக்கும். புத்திரர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்புகள் உயரும். வெளியூர் பயணங்களை

மேற்கொள்வதற்கான சூழல்கள் உண்டாகும். குடும்ப விவகாரங்களில் மற்றவர்களின் தலையீடுகளை தவிர்க்கவும். எடுத்துச்செல்லும் உடைமைகளில் சற்று கவனம் வேண்டும். பயணங்கள் சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சலும், உடல்சோர்வும் ஏற்படும்.

வழிபாடு :

வராகிதேவியை செவ்வாய்க்கிழமைதோறும் வழிபாடு செய்து வர தொழில் தொடர்பான இன்னல்கள் குறையும்.

மீனம் :

சுபச்செய்திகளால் மனமகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருக்கவும். சுயதொழில் புரிபவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உடனிருப்பவர்களிடம் பேசும் பொழுது சற்று கனிவுடன் பேசவும். எதிர்காலம் தொடர்பான புதிய இலக்கை நிர்ணயம் செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். உறவினர்களிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். புத்திரர்கள் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். சிறு தூர பயணங்களால் மனதில் ஒருவிதமான புத்துணர்ச்சி ஏற்படும்.

வழிபாடு :

வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30